யஸ்த்1வாத்1மரதி1ரேவ ஸ்யாதா3த்1மத்1ருப்1த1ஶ்ச1 மானவ: |
ஆத்1மன்யேவ ச1 ஸன்து1ஷ்டஸ்த1ஸ்ய கா1ர்யம் ந வித்3யதே1 ||17||
யஹ—-யார்; து—--ஆனால்; ஆத்ம-ரதிஹி-- சுயத்தில் மகிழ்ச்சி அடையும்; ஏவ—-நிச்சயமாக; ஸ்யாத்—--ஆகும்; ஆத்ம---த்ருப்தஹ--சுய திருப்தி அடைந்த; ச—--மற்றும்; மானவஹ—--மனிதன்; ஆத்மனி—--தன்னிடத்தில்; ஏவ--—நிச்சயமாக; ச--—மற்றும்; ஸந்துஷ்டஹ----திருப்தி அடைந்தவர்; தஸ்ய—---அவருடைய; கார்யம்-—-கடமை; ந—-இல்லை; வித்யதே—-இருக்கிறது
Translation
BG 3.17: ஆனால், சுயத்தில் மகிழ்ச்சி அடைந்து, சுயத்தில் பிரகாசித்து, முழு திருப்தி அடைபவர்களுக்கு, எந்தக் கடமையும் இல்லை.
Commentary
புறப் பொருள்களின் மீது ஆசையை விட்டவர்களால் தான் சுயத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைய முடியும். அடிமைத்தனத்தின் வேர் நமது பொருள் ஆசைகள். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் (3.37 வசனத்தில்) இன்னும் கொஞ்சம் மேலே விளக்குகிறார், ஆசையே எல்லா பாவங்களுக்கும் காரணம், ஆகையால், அதைத் துறக்க வேண்டும்.முன்பு விளக்கியது போல் (2.64 வசனத்தின் அர்த்தத்தில்), ஸ்ரீ கிருஷ்ணர் நாம் ஆசையை கைவிட வேண்டும் என்று கூறும் போதெல்லாம், அவர் பொருள் ஆசைகளையே குறிப்பிடுகிறார், ஆன்மீக முன்னேற்றத்திற்கான அபிலாஷைகளையோ அல்லது கடவுளை உணரும் விருப்பத்தையோ அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இருப்பினும், முதலில், பொருள் ஆசைகள் ஏன் எழுகின்றன? நாம் உடலுடன் சுயத்தை அடையாளம் காணும்போது, உடல் மற்றும் மனதின் ஏக்கங்களை சுயத்தின் விருப்பங்களாக அடையாளம் காண்கிறோம், மேலும் இவை நம்மை மாயா மண்டலத்திற்குள் சுழற்றச் செய்கின்றன. துளசிதாஸ் முனிவர் விளக்குகிறார்:
ஜிப3 ஜிப3 தே1 ஹரி தே1 பி3லகா3னோ த1ப தே1 தே1ஹ கே3ஹ நிஜ மான்யோ,
மாயா ப3ஸ ஸ்வரூப1 பி3ஸராயோ தே3ஹி பி3ரம தே1 தா3ருண துஹ்க பா1யோ
‘ஆன்மா கடவுளிடமிருந்து தன்னைப் பிரித்ததால், பொருள் ஆற்றலின் மாயை அதை மூடியது. அந்த மாயையால், அது தன்னை உடலாக நினைத்துக் கொள்ள ஆரம்பித்தது, அன்றிலிருந்து, சுய மறதியில், அது பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறது.’
ஆன்மிக அறிவொளியுடையவர்கள், சுயம் என்பது பொருள் அல்ல, தெய்வீகமானது, எனவே அழியாதது என்பதை உணர்கிறார்கள். உலகில் அழியக்கூடிய பொருள்களால் அழியாத ஆன்மாவின் தாகத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது, எனவே அந்த புலன்களின் மீது ஏங்குவது முட்டாள்தனம். இவ்வாறு, சுய-ஒளிமயமான ஆன்மாக்கள் கடவுளுடன் தங்கள் உணர்வை ஒன்றிணைக்க கற்றுக்கொள்கின்றன. மற்றும், அவர்களுக்குள் அவரது எல்லையற்ற பேரின்பத்தை அனுபவிக்கின்றன.
உடல் உற்ற ஆன்மாக்களுக்கு விதிக்கப்பட்ட கர்மம் (கடமைகள்) அத்தகைய ஒளிமயமான ஆத்மாக்களுக்கு இனி பொருந்தாது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே அத்தகைய அனைத்து கர்மங்களின் இலக்கை அடைந்துவிட்டனர். உதாரணமாக, கல்லூரி மாணவராக இருக்கும் வரை, பல்கலைக் கழக விதிகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, ஆனால், பட்டம் பெற்றவருக்கு, விதிகள் இப்போது பொருத்தமற்றதாகி விடுகிறது. அத்தகைய விடுதலை பெற்ற ஆன்மாக்களுக்கு, ப்ரஹ்மவித் ஶ்ருதி மூர்த்தினி 'இறைவனுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் இப்போது வேதங்களை தழுவ தவறுகிறார்கள்,' அதாவது, இனி வேத விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறது.
மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு பண்டிதர் ஒரு ஆணையும் பெண்ணையும் திருமண வைபவத்தின் மூலம் ஒருங்கிணைக்கிறார். விழா முடிந்ததும், ‘நீங்கள் இப்போது கணவன் மனைவியாகி விட்டீர்கள்; என் வேலை முடிந்தது நான் கிளம்புகிறேன்' என்று கூறுகிறார். பண்டிதரே, எங்கள் திருமணத்தின் போது நீங்கள் செய்துவைத்த சபதங்களை என் கணவர் நிறைவேற்றவில்லை என்று மனைவி கூறினால் பண்டிதர் கூறுவார்; ‘அது என்னுடைய நிபுணத்துவம் அல்ல. உங்கள் இருவரையும் திருமணம் செய்து வைப்பதே என் கடமை, அந்த வேலை முடிந்துவிட்டது’.
ஆன்மாவை இறைவனுடன் இணைக்க உதவுவதே வேதங்களின் குறிக்கோள். ஆன்மா கடவுளை உணர்ந்தபின், வேத விதிகள் பொருத்தமற்றவை. ஏனெனில், ஆன்மா அவைகளின் அதிகார வரம்பைத் தாண்டி மேம்படுத்த பட்டுவிட்டது.