ஸக்1தா1: க1ர்மண்யவித்3வாந்ஸோ யதா2 கு1ர்வந்தி1 பா4ரத1 |
கு1ர்யாத்3வித்3வாம்ஸ்த1தா2ஸக்1த1ஶ்சி1கீ1ர்ஷுர்லோக1ஸங்ரஹம் ||25||
ஸக்தாஹா—-இணைந்த; கர்மாணி—--கடமைகள்; அவித்வாந்ஸஹ----அறிவிலிகள்; யதா—--எவ்வளவு; குர்வந்தி--—செயல் செய்பவர்கள்; பாரத----பரத வம்ஸத்தின் வாரிசு (அர்ஜுனன்); குர்யாத்—செய்ய வேண்டும்; வித்வான்—--ஞானமுள்ளவர்; ததா--—இவ்வாறு; அஸக்தஹ—--பற்றற்ற; சிகீர்ஷுஹு----விரும்புவது; லோக-ஸங்ரஹம்--—உலகின் நலன்
Translation
BG 3.25: பரத வம்சத்தில் தோன்றியவனே , அறிவிலிகள் முடிவுகளின் மீது பற்றுக்கொண்டு தங்கள் கடமைகளைச் செய்வது போல, அறியாமைக்குரிய மக்களை நேர்வழியில் அழைத்துச் செல்வதற்காகப் பற்றின்றிச் செயல்பட வேண்டும்.
Commentary
முன்னதாக, வசனம் 3.20 இல், ஸ்ரீ கிருஷ்ணர் லோக1-ஸங்க்3ரஹம் ஏவாபி1 ஸம்ப1ஶ்யன் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார், அதாவது ‘மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு’. இந்த வசனத்தில், லோக1-ஸங்க்3ரஹம் சி1கீ1ர்ஷுஹு என்ற வார்த்தையின் அர்த்தம் ‘உலக நலனை விரும்புவது. எனவே, ஞானிகள் எப்போதும் மனித குலத்தின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் வலியுறுத்துகிறார்.
மேலும், இந்த வசனத்தில் ஸ்க்1தா1ஹா அவித்3வாந்ஸஹ என்ற சொற்றொடர் இதுவரை உடல் உணர்வில் உள்ளவர்களுக்கும், அதனால் உலக இன்பங்களில் பற்று கொண்டவர்களுக்கும், ஆனால் ஶாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட வேத சடங்குகளில் முழு நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அறிவற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு வேதங்களைப் பற்றிய புத்தக அறிவு இருந்தாலும், அவர்கள் கடவுளை உணரும் இறுதி இலக்கைப் புரிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்ட அறியாமைக்குரியவர்கள் தங்கள் கடமையை வேத விதிகளின்படி, அலட்சியமோ, சந்தேகமோ இல்லாமல் நேர்மையாகச் செய்கிறார்கள். வேதக் கடமைகள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவது அவர்கள் விரும்பும் பொருள் வெகுமதிகளைத் தரும் என்று அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர். இப்படிப்பட்டவர்களின் சடங்குகளில் இருந்து நம்பிக்கை உடைந்து விட்டால், பக்தி என்ற உயர்ந்த கொள்கையில் நம்பிக்கையை வளர்க்காமல், அவர்கள் போக்கிடம் அற்றவர்கள் ஆவார்கள். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:
தா1வத்1 க1ர்மாணி கு1ர்வீத1 ந நிர்வித்4யேத1 யாவதா1
மத்1-கதா2-ஶ்ரவணாதௌ3 வா ஶ்ரத்3தா4 யாவன் ந ஜாயதே1 (11.20.9)
‘ஒருவன் இந்திரியப் பொருட்களிலிருந்து துறந்து, கடவுள் மீதுள்ள பற்றுதலை வளர்த்துக் கொள்ளாத வரை கர்மங்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.’
அறியாதவர்கள் சடங்குகளை உண்மையாகச் செய்வது போல், ஞானிகளும் வெகுமதிக்காக அல்லாமல், மாறாக சமூகத்திற்கு ஒரு இலட்சியத்தை அமைப்பதற்காக தங்கள் பணியைச் செய்ய வேண்டும், என்று அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.. தவிர, அர்ஜுனனின் குறிப்பிட்ட தற்போதைய சூழ்நிலை ஒரு தர்ம யுத்தம் (நீதியின் போர்). எனவே, சமுதாய நலனுக்காக, அர்ஜுனன் ஒரு போர்வீரனாக தன் கடமையைச் செய்ய வேண்டும்.