Bhagavad Gita: Chapter 3, Verse 35

ஶ்ரேயான்ஸ்வத4ர்மோ விகு3ண: ப1ரத4ர்மாத்1ஸ்வனுஷ்டி2தா1த்1 |

ஸ்வத3ர்மே நித4னம் ஶ்ரேய: ப1ரத4ர்மோ ப4யாவஹ: ||35||

ஶ்ரேயான்--—சிறந்த; ஸ்வ-தர்மஹ:----தனிப்பட்ட கடமை; விகுணஹ----குறைகள் நிறைந்த; பர-தர்மாத்—-மற்றொருவரின் விதிக்கப்பட்ட கடமைகளை விட; ஸு-அனுஷ்டிதாத்--—சரியாகச் செய்யப்பட்டது; ஸ்வ-தர்மே—ஒருவரின் தனிப்பட்ட கடமைகளில்; நிதனம்--—இறப்பு; ஶ்ரேயஹ--—சிறந்தது; பர-தர்மஹ-- மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகள்; பய-ஆவஹஹ----பயம் நிறைந்தது

Translation

BG 3.35: ஒருவருக்கு இயற்கையாக விதிக்கப்பட்ட கடமையை குறைபாடுகளுடன் செய்தாலும் மற்றவற்கு விதிக்கப்பட்ட கடமையைச் சரியாகச் செய்வதை விட, சிறந்தது. உண்மையில், ஆபத்து நிறைந்த மற்றொரு பாதையை பின்பற்றுவதை விட, ஒருவரின் கடமையை நிறைவேற்றுவதில் இறப்பது விரும்பத்தக்கது.

Commentary

இந்த வசனத்தில் தர்மம் என்ற சொல் நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. தர்மம் என்பது இந்து மதத்திலும், பௌத்தத்திலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு இது மிகவும் மழுப்பலான வார்த்தையாகும். நீதி, நன்னடத்தை, கடமை, உன்னத குணம் போன்ற சொற்கள் அதன் பொருளின் ஒரு அம்சத்தை மட்டுமே விவரிக்கின்றன. தர்மம் என்பது த்4ரி என்ற மூல வார்த்தையில் இருந்து வருகிறது, அதாவது தா4ரன் க1ர்னே யோக்3ய அல்லது ‘நமக்கு ஏற்ற பொறுப்புகள், கடமைகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள்.’ உதாரணமாக, ஆத்மாவின் தர்மம் கடவுளை நேசிப்பதாகும். இது நமது இருப்பின் தலைமையானச் நெறிமுறை போன்றது.

ஸ்வ என்ற முன்னிடைச்சொல் ‘சுய’ என்று பொருள்படும். எனவே, ஸ்வ-த4ர்மம் என்பது நமது தனிப்பட்ட தர்மம், இது நமது சூழல், சூழ்நிலை, பக்குவம் மற்றும் வாழ்க்கையின் தொழில் ஆகியவற்றிற்கு பொருந்தக்கூடிய தர்மமாகும். இந்த ஸ்வ-தர்மம் வாழ்க்கையில் நமது சூழல் மாறும்போதும், மற்றும் நாம் ஆன்மீக ரீதியில் தேர்ச்சி பெறும் பொழுதும் மாறலாம். அர்ஜுனனிடம் தனது ஸ்வ-தர்மத்தைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டதன் மூலம், ஸ்ரீ கிருஷ்ணர் அவர்து தொழிலைப் பின்பற்றுமாறும், மற்றவர் வேறு ஏதாவது செய்கிறார் என்பதற்காக அதை மாற்ற வேண்டாம் என்றும் கூறுகிறார்.

வேறொருவர் போல் நடிப்பதை விட நாமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது. நம் இயல்பில் பிறக்கும் கடமைகளை மன உறுதியுடன் எளிதாகச் செய்ய முடியும். மற்றவர்களின் கடைமைகளை மகிழ்ச்சிகரமான ஒன்றாக நினைத்து நாம் மாற நினைத்தால் அது ஆபத்தான விஷயம். அவை நம் இயல்புடன் வேறுபட்டால், அவை நம் புலன்கள், மனம் மற்றும் உணர்வு நிலைக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், ஆன்மீக பாதையில் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். இன்னொருவரின் கடமையைச் செய்யும் இயற்கைக்கு மாறான நிலையில் இருப்பதை விட, ஒருவரின் கடமையை உண்மையாகச் நிறைவேற்றுவதில் இறப்பது சிறந்தது என்று ஸ்ரீ கிருஷ்ணர் இந்த விஷயத்தை வியத்தகு முறையில் வலியுறுத்துகிறார்.

Watch Swamiji Explain This Verse