Bhagavad Gita: Chapter 3, Verse 6

1ர்மேன்ந்த்3ரியாணி ஸந்யம்ய ய ஆஸ்தே1 மனஸா ஸ்மரன் |

இந்த்3ரியார்தா2ன்விமூடா4த்1மா மித்2யாசா1ர: ஸ உச்1யதே1 ||6||

கர்ம-இந்திரியாணி—--செயல் உறுப்புகள்; ஸந்யம்ய-—கட்டுப்படுத்தி; யஹ—--யார்; ஆஸ்தே—-தொடர்ந்து இருப்பவர்; மனஸா--—மனதில்; ஸ்மரன்--—நினைவில்; இந்திரிய-அர்தான்--—புல பொருட்கள்; விமூட-ஆத்மா—-- மாயைக்கு உட்பட்ட; மித்யா--ஆசாரஹ--—கபடக்காரன்; ஸஹ--—அவர்கள்; உச்யதே---என்று அழைக்கப்படுகின்றனர்

Translation

BG 3.6: செயல்களின் வெளிப்புற உறுப்புகளைக் கட்டுப்படுத்துபவர்கள், அதேநேரத்தில் மனதில் புலன்களின் மீது தொடர்ந்து கருத்தூன்றி இருத்தலால், நிச்சயமாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் மற்றும் கபடவாதிகள் என்று அழைக்கப்படுவார்கள்.

Commentary

துறவு வாழ்க்கையின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, மக்கள் பெரும்பாலும் தங்கள் வேலையைத் துறக்கிறார்கள், பின்னர் அவர்கள் செயல்கள் துறப்பின் பரிமாணம் சிற்றின்பத் துறைகளில் இருந்து மனம் மற்றும் அறிவார்ந்த விலகலுடன் சமமான அளவு இல்லை என்பதை பின்னர் கண்டுபிடிப்பார்கள். வெளிப்புறத்தில் மதவாதத்தை வெளிப்படுத்தி உள்ளுக்குள் இழிவான உணர்வுகள் மற்றும் அடிப்படை நோக்கங்களுடன் வாழும் பொழுது இது ஒரு பாசாங்கு தனமான சூழ்நிலையை உருவாக்குகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு தவறான துறவியின் வாழ்க்கையை நடத்துவதை விட, ஒரு கர்ம யோகியாக உலகின் போராட்டங்களை எதிர்கொள்வது சிறந்தது. ஆன்மாவின் பரிணாமப் பயணத்தில் முன்கூட்டிய ஸன்யாஸத்தை எடுத்துக்கொண்டு வாழ்க்கையின் பிரச்சினைகளிலிருந்து ஓடிப்போவது வழி அல்ல.

துறவி கபீர் கிண்டலாகக் கூறினார்:

மன் ந ரங்கா3யே ஹோ,

ரங்கா3யே யோகி311டா3

ஜத1வா ப3தா3யே யோகி3 து4னியா ரமௌலே,

3ஹியா ப3டா3யே யோகி33னி க3யேலே ப31ரா

'ஓ கடுநோன்பு நோற்கிற யோகி, நீங்கள் காவி அங்கிகளை அணிந்திருக்கிறீர்கள், ஆனால் துறவின் நிறத்தால் உங்கள் மனதை சாயமிடுவதை நீங்கள் புறக்கணித்தீர்கள். நீங்கள் நீண்ட முடியை வளர்த்து, உங்கள் உடலில் சாம்பலைப் பூசிவிட்டீர்கள் (பற்றற்ற தன்மையின் அடையாளமாக). ஆனால் உள் பக்தி இல்லாமல், நீங்கள் வளர்த்திருக்கும் வெளிப்புற தாடி உங்களை ஒரு ஆட்டை ஒத்த தோற்றத்தை கொண்டவராக ஆக்குகிறது.’ புலன்களின் பொருள்களை வெளியில் துறந்து தொடர்ந்து மனதில் புலன்களின் மீது தொடர்ந்து கருத்தூன்றியிருப்பவர்கள் கபடவாதிகள் என்றும், அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக கொள்கிறார்கள் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் கூறுகிறார்.

புராணங்கள் இரண்டு சகோதரர்களான தவ்ரித் மற்றும் ஸுவ்ரித் ஆகியோரின் கதையில் இந்த விஷயத்தை விளக்குகின்றன.

கோவிலில் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவைக் கேட்பதற்காக சகோதரர்கள் தங்கள் வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தனர். வழியில், பலத்த மழை பெய்யத் தொடங்கியது, எனவே அவர்கள் தங்குமிடத்திற்கு அருகிலுள்ள கட்டிடத்திற்குள் ஓடினார்கள். அவர்களின் திகைப்புக்கு, அவர்கள் ஒரு விபச்சார விடுதியில் தங்களைக் கண்டார்கள், அங்கு மதிப்பிழந்த பெண்கள் தங்கள் விருந்தினர்களை மகிழ்விக்க நடனமாடிக் கொண்டிருந்தனர். தவ்ரித், மூத்த சகோதரர், திகைத்துப்போய், கோவிலுக்குத் தொடர மழையில் வெளியேறினார். இளைய சகோதரர் ஸுவ்ரித், மழையில் நனையாமல் இருக்க சிறிது நேரம் அமர்ந்திருப்பதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று எண்ணினார்.

தவ்ரித் கோவிலை அடைந்து சொற்பொழிவுக்காக அமர்ந்தார், ஆனால் அவர் மனதில் வருந்தினார், 'ஓ இது எவ்வளவு அலுப்பாக உள்ளது! நான் ஒரு பயங்கரமான தவறு செய்தேன்; நான் விபச்சார விடுதியில் தங்கியிருக்க வேண்டும். என் அண்ணன் அங்கே களியாட்டத்தில் மிகவும் மகிழ்ந்திருக்க வேண்டும்.’ மறுபுறம், ஸுவ்ரித், ‘நான் ஏன் இந்த பாவ வீட்டில் இருந்தேன்? என் சகோதரர் மிகவும் புனிதமானவர்; அவர் தனது புத்தியை பாகவதத்தின் அறிவில் குளிர செய்கிறார். நானும் மழையைத் துணிந்து அங்கே சென்று இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு சிறிய மழையில் கரைந்துவிடும் உப்பால் ஆனவன் அல்ல.’

மழை நின்றதும் இருவரும் மற்றவர் திசையில் புறப்பட்டனர். அவர்கள் சந்தித்த நேரத்தில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எமதூதர்கள் (மரணத்தின் கடவுளின் ஊழியர்கள்) தவ்ரித்தை நரகத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர். தவ்ரித், ‘நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் தவ்ரித். என் அண்ணன் விபச்சார விடுதியில் அமர்ந்திருந்தார். நீங்கள் அவரை நரகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று கூறினார்.

அதற்கு யமதூதர்கள், ‘நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. மழையைத் தவிர்க்க அங்கேயே அமர்ந்திருந்தான், ஆனால் அவன் மனதில் பாகவத சொற்பொழிவில் இருக்க வேண்டும் என்று ஏங்கினான். மறுபுறம், நீங்கள் உட்கார்ந்து சொற்பொழிவைக் கேட்கும்போது, ​​உங்கள் மனம் விபச்சார விடுதியில் இருக்க ஏங்கியது’ என்று கூறினர்.

இந்த வசனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவிப்பதையே தவ்ரித் செய்து கொண்டிருந்தார்; அவர் புலன்களின் பொருட்களை வெளிப்புறமாக துறந்தார், ஆனால் மனதில் அவற்றைக் கொண்டிருந்தார். இது முறையற்ற வகையான துறவு. அடுத்த வசனம் சரியான வகையான துறவைக் கூறுகிறது.

Watch Swamiji Explain This Verse