யதி3 ஹ்யஹம் ந வர்தே1யம் ஜாது1 க1ர்மண்யத1ன்த்3ரித1: |
மம வர்த்1மானுவர்த1ன்தே1 மனுஷ்யா: பா1ர்த2 ஸர்வஶ: ||23||
யதி—--என்றால்; ஹி—--நிச்சயமாக; அஹம்--—நான்; ந—இல்லை; வர்தேயம்—இவ்வாறு ஈடுபட; ஜாது--—எப்போதும்; கர்மணி—--விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில்; அதந்த்ரிதஹ—--கவனமாக; மம—--என்; வர்த்ம—--பாதை; அனுவர்தந்தே—--பின்பற்றவும்; மனுஷ்யாஹா---எல்லா மனிதர்களும்; பார்த—--ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; ஸர்வஶஹ----எல்லா வகையிலும் (ந—வர்தேயம்--—இவ்வாறு ஈடுபடவில்லை என்றால்)
Translation
BG 3.23: ஏனென்றால், நான் விதித்த கடமைகளை கவனமாகச் செய்யவில்லை என்றால், ஓ பார்த்தா, எல்லா மனிதர்களும் எல்லா வகையிலும் என் வழியைப் பின்பற்றுவார்கள்
Commentary
பூமியில் அவரது தெய்வீக பொழுது போக்குகளில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு அரசனாகவும், ஒரு சிறந்த தலைவராகவும் அவதரித்தார். நீதிமான்களில் முதன்மையான விருஷ்ணி வம்சத்தின் அரசன் வஶுதேவனின் மகனாக ஜட உலகில் தோன்றினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வேதகால செயல்களைச் செய்யவில்லை என்றால், பல அறியாமைக்குரிவயர்கள் வேதகாலச் செயல்களை மீறுவது வழக்கமான நடைமுறை என்று நினைத்து அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுவார்கள். மனித குலத்தை வழிதவறச் செய்வதில் அவர் தவறு செய்தவர் ஆவார் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.