புத்3 தி4ர்ஞ்ஞானமஸம்மோஹ: க்ஷமா ஸத்1யம் த3ம: ஶம: |
ஸுக2ம் து3:க2ம் ப4வோபா4வோ ப4யம் ச1ப4யமேவ ச1 ||4||
அஹிம்ஸா ஸமதா1 து1ஷ்டிஸ்த1போ தா3னம் யஶோ:யஶ: |
ப4வன்தி1 பா4வா பூ4தானாம் மத்1த1 ஏவ ப்1ருத2க்3விதா:4 ||5||
புத்திஹி----புத்தி; ஞானம்—--அறிவு; அஸம்மோஹஹ—--சிந்தனை தெளிவு; க்ஷமா—--மன்னிப்பு; ஸத்யம்—-- உண்மை; தமஹ--—புலன்களின் மீது கட்டுப்பாடு; ஶமஹ—--மனதகட்டுப்பாடு; ஸுகம்—--மகிழ்ச்சி; துஹ்கம்—--துக்கம்; பவஹ—--பிறப்பு; அபாவஹ—--மரணம்; பயம்—--பயம்; ச—--மற்றும்; அபயம்—--தைரியம்; ஏவ—--நிச்சயமாக; ச—--மற்றும்; அஹிந்ஸா—--அகிம்சை; ஸமதா—--சமநிலை; துஷ்டிஹி----மனநிறைவு; தபஹ--—தவம்; தானம்--—கொடை; யஶஹ—--புகழ்; அயஶஹ—--இகழ்; பவந்தி—--எழுகின்றன; பாவாஹா—--குணங்கள்; பூதானாம்--—மனிதர்களிடையே; மத்தஹ--—என்னிடமிருந்து; ஏவ—--மட்டுமே; ப்ருதக் விதாஹா—--பல்வேறு வகைகள்
Translation
BG 10.4-5: என்னிடமிருந்தே மனிதர்களுக்கு புத்தி, அறிவு, சிந்தனைத் தெளிவு, மன்னிப்பு, உண்மை, புலன்கள் மற்றும் மனம் மீதான கட்டுப்பாடு, இன்பம் மற்றும் துன்பம், பிறப்பு மற்றும் இறப்பு, பயம் மற்றும் தைரியம், அகிம்சை, சமநிலை, மனநிறைவு, சிக்கனம், தொண்டு, புகழ் மற்றும் இழிவு போன்ற பல்வேறு குணங்கள் தோன்றுகின்றன.
Commentary
இந்த இரண்டு வசனங்களில், பகவான் கிருஷ்ணர், படைப்பில் உள்ள அனைத்தின் மீதும் தம்முடைய முழு ஆட்சியுரிமைமை மற்றும் ஆதிக்கத்தையும் தொடர்ந்து உறுதிப்படுத்துகிறார். இங்கே, அவர் மனித இயல்பின் தனிப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வெவ்வேறு நபர்களில் பல்வேறு அளவுககளில் மற்றும் : கூட்டமைப்புகளில் வெளிப்படும் இருபது உணர்ச்சிகளைக் குறிப்பிடுகிறார். மனிதகுலத்தின் அனைத்து விதமான மனநிலைகள், குணங்கள் மற்றும் இயல்புகள் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன என்று அவர் அறிவிக்கிறார்.
புத்3தி4 என்பது விஷயங்களை அவற்றின் சரியான கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்யும் திறன்.
ஞானம் என்பது பொருள் மற்றும் ஆன்மீகத்தை வேறுபடுத்தும் திறன்.
அஸம்மோஹம் என்பது குழப்பம் இல்லாதது.
க்ஷமா என்பது நம்மைத் துன்புருத்தியவர்களை மன்னிக்கும் திறன்..
ஸத்1ய என்பது அனைவரின் நலனுக்காக உண்மையை அறிவிப்பது.
த3ம் என்பது புலபொருட்களிலிருந்து புலன்களைக் கட்டுப்படுத்துவது.
ஶம் என்பது மனதைக் கட்டுப்படுத்துவது
ஸுக்2 என்பது மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் உணர்ச்சி.
து3ஹ்க1ஹ - துக்கம் என்பது துன்பத்தின் உணர்ச்சி.
பா4வம் என்பது ஒருவரின் 'நான்'. என்ற இருப்பின் உணர்ந்தறிதல்
அபா4வஹ என்பது மரணத்தின் அனுபவம்.
ப4ய என்பது வரவிருக்கும் சிரமங்களைப் பற்றிய பயம்.
அப4ய என்பது பயத்தில் இருந்து விடுபடுவது.
அகிம்சை என்பது எண்ணம், சொல், செயலால் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பது.
ஸமதா1 என்பது நல்ல மற்றும் கெட்ட சூழ்நிலைகளில் சமமாக இருப்பது.
து1ஷ்டி1 என்பது ஒருவரின் கர்மாவால் எது வந்தாலும் அதில்அமைதியைக் கடைப்பிடிப்பது
த1பம் என்பது ஆன்மீக நலனுக்காக, வேதங்களின்படி தன்னார்வத் துறவு ஆகும்.
த3ர்மம் தகுதியான ஒருவருக்கு தானம் செய்வது .
யஶ் என்பது நல்ல குணங்களைக் கொண்டிருப்பதால் எழும் புகழ்.
அயஶ் என்பது கெட்ட குணங்களைக் கொண்டிருப்பதால் ஏற்படும் இழிவானது.
இந்த குணங்கள் அனைத்தும் அவரால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு தனி நபர்களிடம் வெளிப்படுகின்றன என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, அவர் உயிரினங்களில் உள்ள அனைத்து நல்ல மற்றும் கெட்ட இயல்புகளுக்கு ஆதாரமாக இருக்கிறார். இதை மின்நிலையம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்துடன் ஒப்பிடலாம். வெவ்வேறு உபகரணங்கள் வழியாக செல்லும் அதே மின்சரம் வெவ்வேறு விளைவுகளை உருவாக்குகிறது. இது ஒன்றில் ஒலியையும், மற்றொன்றில் ஒளியையும், மூன்றில் வெப்பத்தையும் உருவாக்குகிறது. வெளிப்பாடுகள் வேறுபட்டாலும், அவற்றின் ஆதாரம் மின் நிலையத்திலிருந்து வரும் அதே மின்சரம் ஆகும். இதேபோல், கடவுளின் ஆற்றல் நிகழ்கால மற்றும் கடந்தகால வாழ்க்கையில் நமது தேர்வு செய்யும் சுதந்திரத்த்தின் (பு1ருஷார்த2த்தின்) அடிப்படையில்) நாம் செய்யும் செயல்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நமக்குள் வெளிப்படுகிறது.