ஸஹஜம் க1ர்ம கௌ1ந்தே1ய ஸதோ3ஷமபி1 ந த்1யஜேத்1 |
ஸர்வாரம்பா4 ஹி தோ3ஷேண தூ4மேனாக்3நிரிவாவ்ருதா1: ||48||
ஸஹ-ஜம்—--ஒருவருடைய இயல்பில் பிறக்கும்; கர்ம--—கடமைகளில்; கௌந்தேய—--குந்தியின் மகன் அர்ஜுன\ன்; ஸ-தோஷம்---—குறைகளைக் கண்டாலும்; அபி---—கூட; ந த்யஜேத்--—கைவிடக்கூடாது; ஸர்வ---ஆரம்பாஹா--—அனைத்து முயற்சிகளும்; ஹி—--உண்மையில்;தோஷேண—---குறைகளால்; தூமேன----—புகையால்; அக்னிஹி---—நெருப்பு; இவ--— போல்; ஆவ்ரிதாஹா---—மறைக்கப்படுவது.
Translation
BG 18.48: குந்தியின் மகனே, ஒருவன் தன் இயல்பில் பிறக்கும் கடமைகளில் குறைகளைக் கண்டாலும் கைவிடக் கூடாது. உண்மையில், புகையால் நெருப்பு மறைக்கப்படுவது போல அனைத்து முயற்சிகளும் கடமைகளும் குறைகளால் மறைக்கப்படுகின்றன,
Commentary
சில நேரங்களில் மக்கள் தங்கள் கடமையிலிருந்து பின்வாங்குகிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஒரு குறைபாட்டைக் காண்கிறார்கள். இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர், இயற்கையாகவே நெருப்பின் மேல் புகை உள்ளது போல எந்த வேலையும் தவறு இல்லாமல் இல்லை என்று கூறுகிறார். உதாரணமாக, கோடிக்கணக்கான நுண்ணுயிர்களைக் கொல்லாமல் நாம் சுவாசிக்க முடியாது. நிலத்தில் விவசாயம் செய்தால் எண்ணற்ற நுண்ணுயிரிகளை அழித்து விடுகிறோம். வியாபாரத்தில் போட்டியை எதிர்த்து வெற்றி பெற்றால், மற்றொருவரின் இழப்புக்கு காரணம் ஆகிறோம். நாம் உண்ணும் போது, வேறு ஒருவரின் உணவைப் பறிக்கிறோம். சொந்த கடமைகள் நிறைவேற்றுவதற்கு நாம் செயல்களில் ஈடுபடுவதால், அது குறைபாடுகள் இல்லாமல் இருக்க முடியாது.
ஆனால் நமது பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் நன்மைகள் அதன் குறைபாடுகளை விட அதிகமாக உள்ளன. மேலும் முதன்மையான நன்மை என்னவென்றால், இது ஒருவரை தூய்மைப்படுத்துவதற்கும் மற்றும் முன்னேறுவதற்கும் உதவும் இயற்கையான பாதையை வழங்குகிறது. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியராக இருந்த மார்க் ஆல்பியன், மேக்கிங் எ லைஃப், மேக்கிங் எ லிவிங் என்ற தனது புத்தகத்தில், 1960 முதல் 1980 வரை 1,500 வணிகப் பள்ளி பட்டதாரிகளின் தொழில் வாழ்க்கை கண்காணிக்கப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோள் காட்டுகிறார். தொடக்கத்தில் இருந்து, பட்டதாரிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டனர். முதலில் பணம் சம்பாதிக்க விரும்புவதாகக் கூறியவர்கள், ஏ பிரிவில் உள்ளவர்கள் அவர்கள் உண்மையில் விரும்புவதைப் தங்கள் தங்கள் பொருளாதார தேவைகளை கவனித்துக்கொண்ட பிறகு செய்ய விரும்புவதாகக் கூறினார்கள் ஏ பிரிவு எண்பத்து மூன்று சதவீதம் பட்டதாரிகளை கொண்டு இருந்தது. பி பிரிவு பணம் இறுதியில் தொடரும் என்று உறுதியாக நம்பி முதலில் தங்கள் நலன்களைப் பின்தொடர்ந்தவர்களை கொண்டு இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 101 கோடீஸ்வரர்கள் இருந்தனர். ஏ பிரிவில் இருந்து ஒருவரும்(முதலில் பணம் சம்பாதிக்க விரும்பியவர்), மற்றும் பி பிரிவில் இருந்து நூறு பேர் (தங்கள் ஆர்வத்தைத் தொடர்ந்தவர்) இருந்தனர். பணக்காரர்களாக மாறிய பெரும்பான்மையான மக்கள் தங்கள் பணி கருத்தைக் கவர்வதாக கூறி தங்கள் பணிக்கு நன்றி செலுத்தினர். பெரும்பாலான மக்களுக்கு வேலைக்கும் விளையாட்டுக்கும் வித்தியாசம் இருப்பதாக மார்க் ஆல்பியன் முடிவு செய்கிறார். ஆனால் அவர்கள் தங்கள் விருப்பப்படி வேலையைச் செய்தால், வேலை பொழுதுபோக்காக மாறும், பின்னர் அவர்கள் தங்கள் வேலையை ஒருபோதும் தங்கள் வாழ்க்கையில் மறுநாளுக்கு ஒத்திவைக்க வேண்டியதில்லை. அதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அவரது இயல்புக்கு ஏற்ற வேலையை, அதில் குறைபாடுகள் இருந்தாலும், அதைக் கைவிடாமல், அவருடைய இயல்பான நாட்டத்திற்கு ஏற்ப செயல்பட கேட்டுக்கொள்கிறார். ஆனால் வேலை மேம்படுத்துவதாக இருப்பதற்கு, அடுத்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, சரியான உணர்வுடன் செய்யப்பட வேண்டும்.