ந ச1 த1ஸ்மான்மனுஷ்யேஷு க1ஶ்சி1ன்மே ப்1ரியக்1ருத்1த1ம: |
ப4விதா1 ந ச1 மே த1ஸ்மாத3ன்ய: ப்1ரியத1ரோ பு4வி ||69||
ந--—இல்லை; ச--—மற்றும்; தஸ்மாத்—--அவர்களை விட; மனுஷ்யேஷு—---மனிதர்களில்; கஶ்சித்—--யாரும்; மே--—எனக்கு; ப்ரிய-கிருத்-தமஹ----எனக்கு மிகவும் பிரியமானவர்கள்; பவிதா—--இருக்கும்; ந—ஒருபோதும் இல்லை; ச—மற்றும்; மே—எனக்கு;தஸ்மாத்---—அவர்களை விட; அன்யஹ----வேறு எவரும்; ப்ரிய-தரஹ்—--பிரியமானவர்கள்; புவி----இந்த பூமியில்.
Translation
BG 18.69: அவர்களை விட எந்த மனிதனும் எனக்கு அன்பான சேவை செய்வதில்லை; எனக்கு அவர்களை விட பிரியமானவர்கள் இந்த பூமியில் யாரும் இருக்கமாட்டார்கள்
Commentary
நாம் மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து பரிசுகளிலும், ஆன்மீக அறிவின் பரிசு மிக உயர்ந்த ஒன்றாகும். ஏனெனில், அது பெறுபவரை நித்தியமாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. ஜனக் மன்னன் தன் குருவிடம், 'நீங்கள் எனக்கு வழங்கிய ஆழ்நிலை அறிவு மிகவும் விலைமதிப்பற்றது, நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். பதிலுக்கு நான் உங்களுக்கு என்ன தர முடியும்?’ அதற்கு குரு அஷ்டவக்ரர், ‘உன் கடனை தீர்ப்பதற்கு உன்னால் எதுவும் கொடுக்க முடியாது. நான் கொடுத்த அறிவு தெய்வீகமானது, உங்களிடம் உள்ள அனைத்தும் பொருள் வகையை சார்ந்தது உலகப் பொருள்கள் தெய்வீக அறிவுக்கு விலையாக இருக்க முடியாது. ஆனால் உங்களால் ஒன்று செய்ய முடியும். இந்த அறிவின் தாகம் கொண்ட ஒருவரை நீங்கள் எப்போதாவது கண்டால், அவருடன் பகிர்ந்து கொள்.’ என்று பதிலளித்தார்
ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையின் அறிவைப் பகிர்ந்து கொள்வதை, கடவுளுக்குச் செய்யும் உயர்ந்த அன்பான சேவையாக அவர் கருதுவதாக இங்கே கூறுகிறார். இருப்பினும், பகவத்கீதையைப் பற்றி விரிவுரை செய்பவர்கள் தாங்கள் ஒரு பெரிய செயலைச் செய்வதாக உணரக்கூடாது. இறைவனின் கைகளில் ஒரு கருவியாகத் தன்னைக் கண்டு, இறைவனின் அருளுக்கு எல்லாப் புகழையும் வழங்குவதே ஆசிரியரின் முறையான அணுகுமுறை.