யஸ்ய நாஹங்க்1ருதோ1 பா4வோ பு3த்3தி4ர்யஸ்ய ந லிப்1யதே1 |
ஹத்1வாபி1 ஸ இமாம்லோகா1ன் ந ஹந்தி1 ந நிப1த்1யதே1 ||17||
யஸ்ய--—யாருடைய; ந அஹங்க்ரிதஹ----செய்பவன் என்ற அகங்காரத்திலிருந்து விடுபட்டவர்; பாவஹ---—இயற்கை; புத்திஹி----புத்தி; யஸ்ய—--யாருடைய; ந லிப்யதே—--பற்றுதலில்லாத; ஹத்வா—--கொன்றாலும்; அபி—--கூட; ஸஹ---அவர்கள்; இமான்—--இந்த; லோகான்--—உயிரினங்களை; ந---—இல்லை; ஹந்தி—--கொல்வதோ; ந--—இல்லை; நிபத்யதே--—கட்டுப்படுத்தப்படுவது.
Translation
BG 18.17: செய்பவன் என்ற அகங்காரத்திலிருந்து விடுபட்டவர்களும், பற்றுதலில்லாத புத்தியை உடையவர்களும், உயிர்களைக் கொன்றாலும், அவர்கள் கொல்வதோ அல்லது செயல்களால் கட்டுப்படுத்தப்படுவதோ இல்லை.
Commentary
முந்தின ஸ்லோகத்தில் மழுங்கிய புத்தியை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது தூய புத்தியை விவரிக்கிறார்.. தூய புத்தியை உடையவர்கள் செய்பவர்கள் என்ற தவறான அகங்காரத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்று கூறுகிறார். அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிக்க முற்படுவதில்லை. எனவே, அவர்கள் செய்யும் கர்ம வினைகளில் அவர்கள் கட்டுப்படுவதில்லை. முன்பு 5.10 வது வசனத்திலும், முடிவுகளில் இருந்து விலகியவர்கள் பாவத்தால் ஒருபோதும் கறைபடுவதில்லை என்று கூறியிருந்தார். பொருள் கண்ணோட்டத்தில், அவர்கள் வேலை செய்வதாகத் தோன்றலாம், ஆனால் ஆன்மீகக் கண்ணோட்டத்தில், அவர்கள் சுயநல நோக்கங்களிலிருந்து விடுபட்டவர்கள், எனவே அவர்கள் கர்மாவின் விளைவுகளுக்குக் கட்டுப்படுவதில்லை.
ரஹீம் கன்கனா இந்திய வரலாற்றில் முகலாய காலத்தில் புகழ்பெற்ற கவிஞர்-துறவி ஆவார். அவர் பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும், கிருஷ்ணரின் சிறந்த பக்தராக இருந்தார். அவர் தர்மம் செய்யும்போது, அவர் தனது கண்களைத் தாழ்த்துவார். அவரது இந்த பழக்கம் பற்றி ஒரு அன்பான சம்பவம் தொடர்புடையது. புனித துளசிதாஸ் ரஹீமின் பிச்சை வழங்கும் முறையைக் கேள்விப்பட்டதாகக் கூறப்படுகிறது:
ஐஸி தே3னி தே3னா ஜ்யுன், கி1த1 ஸீகே2 ஹோ ஸைன
ஜ்யோ ஜ்யோ க1ர ஊஞ்யோ க1ரோ, தி1யோ தி1யோ நீசே1 நைனா
‘ஐயா, இப்படி தானம் செய்ய எங்கே கற்றுக்கொண்டீர்கள்? உங்கள் கைகள் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அவ்வளவு கீழே உங்க கண்கள் உள்ளன .ரஹீம் அழகாகவும் மிகவும் பணிவாகவும் பதிலளித்தார்:
தே3னஹார கோ1யி அவுர் ஹை, பே4ஜத ஹை தி 3ன ரைன
லோக3 ப1ரம ஹம ப1ர க1ரேன், யாதே1 நீசே1 நைனா
‘இரவும் பகலும் கொடுப்பவன் வேறொருவன் . ஆனால் உலகம் என்னை புகழ்கிறது, அதனால் நான் என் கண்களைத் தாழ்த்திக் கொள்கிறேன்.’
நமது சாதனைகளுக்கு நாமே காரணம் அல்ல என்பதைப் புரிந்துகொள்வது, செய்வினையின் அகங்காரப் பெருமையிலிருந்து நம்மை விடுவிக்கிறது.