அஸக்1த1புத்3தி4: ஸர்வத்1ர ஜிதா1த்1மா விக3த1ஸ்ப்1ருஹ: |
நைஷ்க1ர்ம்யஸித்3தி4ம் ப1ரமாம் ஸன்யாஸேனாதி4க3ச்1ச2தி1 ||49||
அஸக்த-புத்திஹி----பற்றற்ற புத்தி உடையவர்கள்; ஸர்வத்ர--—எல்லா இடங்களிலும்; ஜித-ஆத்மா--—தங்கள் மனதை வென்றவர்கள்; விகத-ஸ்ப்ருஹஹ--—ஆசைகளிலிருந்து விடுபட்டவர்; நைஷ்கர்ம்ய-ஸித்திம்---—செயலற்ற நிலையை அடைந்து; பரமாம்—உயர்ந்த; ஸன்யாஸேன---—துறவுப் பயிற்சியால்; அதிகச்சதி----அடைகிறார்கள
Translation
BG 18.49: புத்தி எங்கும் பற்றுதல் அற்று, மனதைக் கட்டுப்படுத்தி, துறவுப் பயிற்சியால் ஆசைகளிலிருந்து விடுபட்டவர்கள், செயலில் இருந்து விடுதலை பெறும் உயர்ந்த பரிபூரணத்தை அடைகிறார்கள்.
Commentary
இந்த கடைசி அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஏற்கனவே விளக்கிய பல கொள்கைகளை மீண்டும் கூறுகிறார். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில், அவர் அர்ஜுனனிடம், வாழ்க்கையின் பொறுப்புகளை விட்டு ஓடுவது ஸன்யாஸம், அல்லது துறவறம் இல்லை என்பதை விளக்கினார். இப்போது அவர் செயலற்ற நிலை அல்லது நைஷ்க1ர்ம்ய-சித்3தி4யை விவரிக்கிறார். நிகழ்வுகள் மற்றும் விளைவுகளிலிருந்து நம்மைப் பிரித்து, நம் கடமையைச் செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நிலையை உலக ஓட்டத்தின் இடையிலும் அடையலாம். ஒரு பாலத்தின் கீழ் ஓடும் நீர் ஒரு பக்கத்திலிருந்து நுழைந்து மறுபுறம் வெளியேறுவதற்கு ஒத்ததாகும். பாலம் தண்ணீரைப் பெறுவதோ அல்லது விநியோகிப்பதோ இல்லை; அதன் ஓட்டத்தால் அது பாதிக்கப்படாமல் உள்ளது. அதேபோல், கர்ம யோகிகள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள், ஆனால் நிகழ்வுகளின் நீரோட்டத்தால் மனதை பாதிக்காமல் வைத்திருக்கிறார்கள். கடவுளை வணங்கும் செயலாக, தங்கள் கடமையைச் செய்வதில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதை அவர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இறுதி முடிவை அவருடைய கைகளில் விட்டுவிடுகிறார்கள், அதனால் என்ன நடந்தாலும் அதில் திருப்தியடைகிறார்கள் மற்றும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இந்த விஷயத்தை விளக்கும் எளிய கதை கீழே தரப்பட்டுள்ளது :
ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். முதல் மகளுக்கு விவசாயி ஒருவருக்கும், இரண்டாவது மகளுக்கு செங்கல் சூளை உரிமையாளருக்கும் திருமணம் நடந்தது. ஒரு நாள், தந்தை முதல் மகளுக்கு தொலை பேசிமூலம் நலம் விசாரித்தார். அதற்கு அவர் மகள், ‘அப்பா, நாங்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். இனி வரும் மாதங்களில் பெரு மழை பெய்ய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.' என்று கூறினார். பின்னர் இரண்டாவது மகளை அழைத்த அவரிடம் அவருடைய இரண்டாவது மகள் கூறினார் அழைத்து, 'அப்பா, எங்களிடம் பணம் குறைவாக உள்ளது. தயவு செய்து இந்த ஆண்டு மழையை அனுப்ப வேண்டாம் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், இதனால் அதிக சூரிய ஒளி பெற்று அதிகமாக செங்கற்களை உற்பத்தி செய்ய இயலும்.’ என்று கூறினார். தந்தை தனது மகள்களின் எதிர் கோரிக்கைகளைக் கேட்டு, 'எது சிறந்தது என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அவர் சரியென்று நினைப்பதைச் செய்யட்டும்.’ என்று நினைத்தார். கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வது, உலகில் இடைவிடாத நிகழ்வுகளின் ஓட்டத்தில் மூழ்கியிருந்தாலும், விளைவுகளிலிருந்து பற்றின்மையைக் கொண்டுவருகிறது.