Bhagavad Gita: Chapter 2, Verse 17

அவினாஶி து11த்1வித்3தி4 யேன ஸர்வமித3ம் த11ம் |

வினாஶமவ்யயஸ்யாஸ்ய ந க1ஶ்சி1த்11ர்து1மர்ஹதி1 ||17||

அவினாஶி---அழியாதது; து---உண்மையில்; தத்---அது; வித்தி-—-அறிந்து கொள்; யேன-—-யாரால்; ஸர்வம்-—- முழுவதும்;  இதம்-—- இந்த ; ததம்-— பரவப்பட்ட; வினாஶம்-—-அழிவை;  அவ்யயஸ்ய-—-அழியாத; அஸ்ய-—-இதனுடைய; ந கஷ்சித்----யாரும் இல்லை; கர்தும்-—-ஏற்படுத்த; அர்ஹதி—--முடியும்

Translation

BG 2.17: உடல் முழுவதும வியாபித்துள்ளதை அழியாத, அழியாதது என்று அறிந்து கொள். ஆத்மாவின் அழிவை யவராலும் ஏற்படுத்த முடியாது.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான உறவை ஆன்மா உடலில் வியாபித்துள்ளது என்று கூறி நிறுவுகிறார். இதன்மூலம் என்ன குறித்து காட்டுகிறார்? ஆன்மா உணர்வுபூர்வமானது, அதாவது, அது உணர்வைக் கொண்டுள்ளது. உடல் உணர்வு இல்லாத, உணர்ச்சியற்ற பொருளால் ஆனது. இருப்பினும், ஆன்மா அதில் தங்கியிருப்பதன் மூலம் உடலுக்கும் உணர்வின் தரத்தை அளிக்கிறது. அதன் விளைவாக, ஆன்மா உடலில் எங்கும் தன் உணர்வைப் பரப்பி வியாபிக்கிறது.

ஆன்மாவின் இருப்பிடம் குறித்ந் சிலர் இங்கு ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். ஆன்மா இதயத்தில் இருப்பதாக வேதங்கள் கூறுகின்றது:

ஹ்ருதி 3 ஹ்யேஷ ஆத்1மா (ப்1ரஶ்னோப1னிஷத3ம் (3.6)

ஸ வா ஏஷ ஆத்1மா ஹ்ருதி3 (சா2ந்தோ3க்3ய உப1நிஷத3ம் (8.3.3)

ஹ்ருதி 3 என்ற சொல் இதயத்தின் பகுதியில் ஆத்மா அமர்ந்திருப்பதைக் குறிக்கிறது. ஆனாலும், ஆன்மாவின் குணமாகிய உணர்வு, உடல் முழுவதும் பரவுகிறது. இது எப்படி நடக்கிறது? வேத வியாஸ் இந்த கருத்தை பின்வருமாறு விளக்குகிறார்.

அவிரோத4ஶ்ச1ந்த3னவத்1 (ப்3ரஹ்ம ஸூத்1ர (2.3.23)

'நெற்றியில் சந்தனம் பூசுவது எப்படி உடம்பு முழுவதும் குளிர்ச்சியடைகிறதோ, அதே போல ஆத்மா, இதயத்திற்குள் தங்கி இருந்தாலும், தன் உணர்வை உடல் முழுவதும் செலுத்துகிறது.'

மீண்டும், உணர்வு ஆன்மாவின் குணாதிசயம் என்றால் எப்படி அது உடலில் பரவுகிறது? என்று சிலர் கேட்கலாம் இந்தக் கேள்விக்கு வேத வியாஸரும் பதில் அளித்துள்ளார்:

வ்யக்1தி1ரேகோ1 க3ந்த4வத் (ப்3ரஹ்ம ஸூத்1ர 2.3.26)

‘மணம் என்பது பூவின் குணம். ஆனால் பூ வளரும் தோட்டமும் நறுமணம் வீசுகிறது.’ அதாவது பூவின் மணம் தோட்டத்தில் ஊடுருவுகிறது. அதேபோல், ஆன்மா உணர்வுபபூர்வமானது, மேலும், அது உணர்வுடன் வியாபிப்பதன் மூலம் உடலின் ஜட பொருளையும் உணர்வுபூர்வமானதாக ஆக்குகிறது.