Bhagavad Gita: Chapter 2, Verse 7

கா1ர்ப1ண்யதோ3ஷோப1ஹத1ஸ்வபா4வ: ப்1ருச்1சா2மி த்1வாம் த4ர்மஸம்மூட4சேதா1: |

யச்1ச்ரே2ய: ஸ்யான்னிஶ்சி11ம் ப்3ரூஹி த1ன்மே ஶிஷ்யஸ்தே1‌ஹம் ஶாதி4 மாம் த்1வாம் ப்1ரப1ன்னம் ||7||

கார்பண்யதோஷ-—-கோழைத்தனத்தின்-குறைபாட்டால்; உபஹத-—-முற்றுகையிடப்பட்ட; ஸ்வபாவஹ--- இயற்கையில்; ப்ருச்சாமி-—வினவுகிறேன்; த்வாம்-—தங்களிடம்; தர்ம-—-கடைமை; ஸம்மூட-—-குழப்பமடைந்த; சேதாஹா-—மனதுடன்; யத்-—-எது; ஶ்ரேயஹ-—-சிறந்ததாக; ஸ்யாத்---இருக்குமோ; நிஶ்சிதம்-—தீர்மானமாக;  ப்ரூஹி-—கூறுங்கள்; தத்-—-அதை; மே----எனக்கு; ஶிஷ்யஹ-—-சீடன்; தே-‌—--உங்களுடைய;  அஹம்-—நான்; ஶாதி-—அறிவுறுத்துங்கள்; மாம்---—எனக்கு; த்வாம்-—--உங்களிடம்; ப்ரபன்னம்-—--சரண் அடைந்துள்ளேன்

Translation

BG 2.7: எனது கடமையைப் பற்றி நான் குழப்பமடைந்து, கவலையுடனும் அச்சத்த்டனும் சூழப்பட்டிருக்கிறேன். நான் உங்களுடைய சீடன் மற்றும் உங்களிடம் சரண் அடைந்துள்ளேன். தயவு செய்து எனக்கு எது சிறந்தது என்று அறிவுறுத்துங்கள்.

Commentary

பகவத் கீதையில் இது ஒரு சிறந்த தருணம். முதன்முறையாக, ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பரும் உறவினருமான அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரை தனது குருவாக இருக்கும்படி கோருகிறார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தான் கா1ர்ப்ப1ண்ய தோ3ஷம் அல்லது நடத்தையில் கோழைத்தனத்தின் குறைபாட்டால் வெல்லப்பட்டபட்டிருப்பதால் ஸ்ரீ கிருஷ்ணர் தனது குருவாகி, மங்களகரமான பாதையைப் பற்றி அவருக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்.

அனைத்து வேத நூல்களும் ஒருமனதாக நமது நித்திய நலனுக்கான தெய்வீக அறிவை நாம் பெறுவது ஒரு ஆன்மீக குருவின் மூலமாகத்தான் என்று அறிவிக்கின்றன:

த1த்3விஞ்ஞானார்த்1த1ம் ஸ கு1ருமேவாபி4க1ச்1சே2த்1 ஸமித்1பா1ணிஹி

ஶ்ரோத்1ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம் (முண்ட3கோ1பநிஷத3ம் (1.2.12)

 

'முழுமையான உண்மையை அறிய, வேதங்களை அறிந்தவரும், நடைமுறையில் கடவுளை உணரும் தளத்தில் நிலைகொண்டவருமான ஒரு குருவை அணுகவும்.'

 

த1ஸ்மாத்3 கு3ரும் ப்1ரபத்3யேத1 ஜிஞாஸுஹு ஶ்ரேய உத்1த1மம்

ஶாப்1தே1 ப1ரே ச1 நிஷ்ணாத1ம் ப்3ரஹ்மணி யுப1ஶமாஶ்ரயம் (பா4க3வத1ம் 11.3.21)

 

‘உண்மையை தேடுபவர்கள், வேதத்தின் முடிவைப் புரிந்துகொண்டு, எல்லாப் பொருள் சார்ந்த விஷயங்களையும் ஒதுக்கிவிட்டு, கடவுளிடம் முழு அடைக்கலம் பெற்ற ஒரு ஆன்மீக குருவிடம் சரணடைய வேண்டும்.’

 

ராமாயணம் கூறுகிறது:

 

கு3ரு பி3னு ப4வ நிதி4 த1ரயி ந கோ1யீ ஜௌன் பி3ரஞ்சி1 ஶங்க1ர ஸம ஹோயீ

‘குருவின் அருளில்லாமல் உயர்ந்த ஆன்மீக ஆர்வலர்கள் கூட ஜடப் பெருங்கடலைக் கடக்க முடியாது.’ ஸ்ரீ கிருஷ்ணர் இதைத் தானே பகவத் கீதையில் 4.34 வசனத்தில் கூறுகிறார்: ‘ஆன்மீக குருவை அணுகி உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அவரிடம் பயபக்தியுடன் விசாரித்து அவருக்கு சேவை செய்யுங்கள். அத்தகைய ஞானம் பெற்ற துறவி, உண்மையைக் கண்டவர் ஆனதால், உங்களுக்கு அந்த அறிவை வழங்க முடியும். ‘அறிவு பெறுவதற்கு ஒரு குருவை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை வெளிப்படுத்த, ஸ்ரீ கிருஷ்ணரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இளமைப் பருவத்தில் ஸந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு ஶாஸ்திரங்களைக் கற்க அவர் ஆசிரமத்திற்கு சென்றார். அவரது வகுப்புத் தோழரான ஸுதாமா, குறிப்பிட்டார்

யஸ்யச்1ச2ந்தோ3 மயம் ப்3ரஹ்ம தே3ஹ ஆவப1னம் விபோ4

ஶ்ரேயஸாம் த1ஸ்ய கு3ருஷு வாஸோ ’த்1யந்த1விட3ம்ப3னம்

(பா4க3வத1ம் 10.80.45)

 

‘ஓ ஸ்ரீ கிருஷ்ணா, வேதங்கள் உனது உடலைப் போன்றது, உன்னிடம் உள்ள அறிவிலிருந்து வெளிப்படுகிறது (எனவே, உங்களுக்கு குருவை உருவாக்க வேண்டிய அவசியம்தான் என்ன?). ஆயினும், நீங்களும் ஒரு குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாசாங்கு செய்கிறீர்கள்; இது உங்கள் தெய்வீக பொழுதுபோக்கு (லீலை) மட்டுமே.’

 

உண்மையில், ஸ்ரீ கிருஷ்ணரே உலகின் முதல் குரு, ஏனெனில் அவர் இந்த ஜடவுலகில் முதலில் பிறந்த ப்ரஹ்மாவின் குரு. மாயாவின் தாக்கத்தில் இருக்கும் ஆத்மாக்களாகிய நமக்கு நம் அறியாமையை போக்க ஒரு குரு தேவை என்பதை அவருடைய உதாரணத்தின் மூலம் கற்பிப்பதற்காக அவர் இந்த லீலையை நமது நன்மைக்காக செய்தார். இந்த வசனத்தில், அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சீடனாக சரணடைந்து அவரது செயல்களைப் பற்றி அவருக்கு அறிவூட்டுமாறு தனது குருவிடம் கேட்டுக் கொள்கிறார்.