ஆஶ்ச1ர்யவத்1ப1ஶ்யதி1 கஶ்சி1தே3ன
மாஶ்ச1ர்யவத்3வத3தி1 த1தை2வ சா1ன்ய: |
ஆஶ்ச1ர்யவச்1சை1னமன்ய: ஶ்ருணோதி1
ஶ்ருத்1வாப்1யேனம் வேத3 நசை1வ க1ஶ்சி1த்1 ||29||
ஆஶ்சர்யவத்---ஆச்சரியமாக; பஶ்யதி—--பார்க்கிறார்கள்; கஶ்சித்—--சிலர்; ஏனம்—--இந்தஆத்மாவை; ஆஶ்சர்யவத்—--ஆச்சரியமாக; வததி— விவரிக்கிறார்கள்; ததா—இவ்வாறு; ஏவ--—உண்மையில் ச—--மற்றும்; அன்யஹ—---சிலர்; ஆஶ்சர்யவத்— ஆச்சரியமாக; ச—---மற்றும்; ஏனம்—-- இந்த ஆன்மாவை; வேத—அறிவது; ந—இல்லை அன்யஹ—--வேறு சிலர்; ஶ்ருணோதி—--கேட்கிறார்கள்; ஶ்ருத்வா—--கேட்டாலும்; அபி—--கூட; ஏனம்—--—--இந்த ஆத்மாவை; ; ச—--மற்றும்; ஏவ—--கூட; கஶ்சித்—--வேறு சிலர்;
Translation
BG 2.29: சிலர் ஆன்மாவை ஆச்சரியமாக பார்க்கிறார்கள், சிலர் அதை ஆச்சரியமாக விவரிக்கிறார்கள், சிலர் ஆன்மாவை ஆச்சரியமாக கேட்கிறார்கள், மற்றவர்கள் கேட்டாலும் கூட அதை புரிந்துகொள்ள முடிவதில்லை.
Commentary
சிறிய அணுக்கள் முதல் பெரிய விண்மீன் திரள்கள் வரை உலகில் அடங்கிய அனைத்து படைப்புகளும் திகைக்க வைக்கின்றன, .ஏனென்றால், அவை அனைத்தும் கடவுளின் அற்புதமான படைப்புகள். .ஒரு சிறிய ரோஜா பூவும் அற்புதமானது; அதன் அமைப்பு, மணம், மற்றும் அழகு மிக அற்புதமானது. ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் வாசஸ்தலமான பத்தாயிரம் தலை உடைய தெய்வீக நாகமான அனந்த் சேஷ், படைப்பின் தொடக்கத்தில் இருந்து கடவுளின் மகிமைகளைப் பாடி வருகிறார், இன்னும் அவற்றை பாடி முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆன்மா, கடவுளின் ஒரு துண்டுப் பகுதியாக, உலக விஷயங்களை விட மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அது பொருள் இருப்பின் அறிவு எல்லைக்கு அப்பாற்பட்டது. ஏனெனில், பொருள் இருப்பின் அறிவு எல்லை கடந்தது. கடவுள் தெய்வீகமாக இருப்பது போல, அதன் துணுக்கு ஆன்மாவும் தெய்வீகமானது. இந்த காரணத்திற்காக, ஆன்மாவைப் புரிந்துகொள்வதற்கு வெறும் அறிவாற்றல் போதுமானதாக இல்லை. ஏனெனில், ஆன்மாவின் இருப்பு மற்றும் தன்மையைப் புரிந்துகொள்வது கடினம். க1டோ2ப1நிஷத3ம் கூறுகிறது:
ஶ்ரவணாயாபி 1 ப3ஹுபி4ர்யோ ந லப்4யஹ ஶ்ருண்வந்தோ1 அபி1 ப3ஹவோ யம்
ந வித்3யுஹு ஆஶ்சர்1யோ வக்1தா1 கு1ஷலோ அஸ்ய லப்3தா4
ஆஶ்ச1ர்யோ ஞாதா1 கு1ஶலானுஶிஷ்ட1ஹ (1.2..7)
‘தன்னை உணர்ந்த ஆசிரியர் மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஆசிரியரிடம் சுய-உணர்தல் அறிவியல் பற்றிய அறிவுரைகளைக் கேட்கும் வாய்ப்பு இன்னும் அரிது. நல்ல அதிர்ஷ்டத்தால், அத்தகைய வாய்ப்பு கிடைத்தால், இந்த தலைப்பைப் புரிந்துகொள்ளக்கூடிய மாணவர்கள் அரிதிலும் அரிது.' எனவே, நேர்மையான முயற்சிகள் இருந்தபோதிலும், பெரும்பான்மையான மக்கள் ஆன்மாவின் அறிவியலில் ஆர்வம் காட்டாதபோதும் அல்லது புரிந்து கொள்ள முடியாதபோதும் ஒரு கற்றறிந்த ஆசிரியர் ஒருபோதும் சோர்வடையமாட்டார்.