ய: ஸர்வத்1ரானபி4ஸ்னேஹஸ்த1த்1த1த்1ப்1ராப்1ய ஶுபா4ஶுப4ம் |
நாபி4னன்த3தி1: ந த்3வேஷ்டி2 த1ஸ்ய ப்1ரஞ்ஞா ப்1ரதி1ஷ்டி2தா1 ||57||
யஹ—--எவர்; ஸர்வத்ர----எல்லா நிலைகளிலும்; அனபிஸ்னேஹஹ—--பற்றற்று ;தத்---அது; தத்—--அது ; ப்ராப்ய— --அடைந்து; ஶுப—--நல்லது; அஶுபம்— தீமை; ந—இல்லை; அபிநந்ததி—--மகிழ்ச்சி; ந—இல்லை; த்வேஷ்டி—மனச்சோர்வடைந்த;தஸ்ய—--அவருடைய; ப்ரஞ்ஞா—-ஞானம்; ப்ரதிஷ்டிதா—-- நிலையானது
Translation
BG 2.57: எவர் எல்லா நிலைகளிலும் பற்றற்று, நல்ல அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சி அடையாமல் மற்றும் இன்னல்களால் மனச் சோர்வு அடையாமல் இருக்கிறாரோ அவர் முழுமையான, நிலையான அறிவை கொண்ட ஞானி ஆவார்.
Commentary
இங்கிலாந்து நாட்டின் பிரபல கவிஞரான ருட்யார்ட் கிப்ளிங், ஸ்தித ப்ரஞ்ஞ (நிலையான அறிவுத்திறன் கொண்டவர்) பற்றிய இந்த வசனத்தின் சாராம்சத்தை அவரது புகழ்பெற்ற கவிதையான இஃப் இல் பொதிந்துள்ளார். கவிதையிலிருந்து சில வரிகள் இங்கே:
உன்னால் கனவு காண முடிந்தால்- கனவுகளை உன்னுடைய எஜமானனாக ஆக்காமல் , இருந்தால்;
உன்னால் சிந்திக்க முடிந்தால் - எண்ணங்களை உன்னுடைய இலக்காகக் கொள்ளாமல் இருந்தால்,
நீ வெற்றி மற்றும் பேரழிவைச் சந்தித்து அந்த இரண்டு வஞ்சகர்களையும் ஒரே மாதிரியாக நடத்தினால்;
...
எதிரிகளோ அல்லது அன்பான நண்பர்களோ உன்னைத் துன்புறுத்த முடியாது என்றால்,
அனைவரையும் சமமாக பாரபட்சமின்றி பாவித்தால்:
சகிக்க முடியாத நிமிடத்தை அறுபது வினாடிகள் மதிப்புள்ள தூர ஓட்டத்தில் நிரப்ப முடிந்தால்,
பூமியும் அதில் உள்ள அனைத்தும் உன்னுடையது,
மேலும்- என்னவெனில் - நீ ஒரு மனிதனாக இருப்பாய், என் மகனே!
இக்கவிதையின் புகழ், ஞான நிலையை அடைய மனிதர்களுக்கு உள்ள இயல்பான தூண்டுதலைக் காட்டுகிறது, இதை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விவரிக்கிறார். பரமாத்மாவால் விவரிக்கப்படும் அதே ஞான நிலையை ஆங்கிலக் கவிஞர் எப்படி வெளிப்படுத்தினார் என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். உண்மை என்னவெனில், ஆன்மாவின் உள்ளார்ந்த இயல்பு ஞானம் பெறுவதற்கான தூண்டுதலாகும். எனவே, தெரிந்தோ தெரியாமலோ, எல்லா கலாச்சாரங்களிலும், எல்லோரும் அதற்காக ஏங்குகிறார்கள். அர்ஜுனனின் கேள்விக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அதை இங்கே விவரிக்கிறார்.