அவ்யக்1தா1தீ3னி பூ4தா1னி வ்யக்1த1மத்4யானி பா4ரத1 |
அவ்யக்1த1னித4னான்யேவ த1த்1ர கா1 ப1ரிதே3வனா ||
28 ||
அவ்யக்த-ஆதினி--—பிறப்பதற்கு முன்வெளிப்படாத;; பூதானி—--படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள்; வ்யக்த—--வெளிப்படும்; மத்யானி—--இடையில்; பாரத—--பரதவம்சத்தின் வழித்தோன்றலே; அவ்யக்த—--வெளிப்படாத; நிதனானி—--இறப்பில்; ஏவ—--உண்மையில்; தத்ர----எனவே; கா---என்ன; பரிதேவனா---வருத்தம்
Translation
BG 2.28: ஓ பரத வம்சத்தின் வழித்தோன்றலே, படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் பிறப்பதற்கு முன் வெளிப்படாமல், வாழ்வில் வெளிப்பட்டு, மீண்டும் இறப்பின் பின் வெளிப்படாமல் இருக்கின்றன. அதனால் ஏன் வருத்தப்பட வேண்டும்?
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர் 2.20 வசனத்தில் ஆன்மாவைப் பற்றிய புலம்பலின் காரணத்தையும், 2.27 வசனத்தில் உடலைப் பற்றிய காரணத்தையும் அகற்றினார். இப்போது இந்த வசனத்தில் இரண்டையும் சேர்த்துக் கொள்கிறார். ஸ்ரீமத் பாகவதத்தில், நாரத முனிவர் யுதிஷ்டிரருக்கு இதற்கு ஒத்த வழிகளில் அறிவுறுத்தினார்:
யன் மன்யஸே த்4ருவம் லோக1ம் அத்4ருவம் வா ந சோ1ப4யம்
ஸர்வதா2 ந ஹி ஶோச்1யாஸ் தே1 ஸ்நேஹாத்3 அன்யத்1ர மோஹஜாத்1 (1.13.43)
‘ஆளுமையை நித்திய ஆத்மாவாகக் கருதினாலும் அல்லது தற்காலிக உடலாகக் கருதினாலும், ஆன்மாவும் உடலும் சிந்திக்க முடியாத கலவையாக நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் எந்த வகையிலும் புலம்பக்கூடாது. புலம்பலுக்குக் காரணம் மாயையிலிருந்து எழும் பற்றுதல் மட்டுமே.’
ஜட உலகில், ஒவ்வொரு ஆன்மாவும் ஸ்தூல உடல், நுண்ணுடல், காரண உடல் ஆகிய மூன்று உடல்களால் பிணைக்கப்பட்டுள்ளது.
பேருடல்: (ஸ்தூ2ல ஶரீர்) பூமி, நீர், நெருப்பு, காற்று, மற்றும் அம்பரம் ஆகிய இயற்கையின் ஐந்து மொத்த கூறுகளைக் கொண்டுள்ளது
நுட்பமான உடல்: (ஸூக்ஷ்ம ஶரீர்) பதினெட்டு கூறுகளைக் கொண்டுள்ளது - ஐந்து உயிர் காற்று, ஐந்து வேலை புலன்கள், ஐந்து அறிவு புலன்கள், மனம், புத்தி மற்றும் ‘நான்' என்னும் முனைப்பு.
காரண உடல்: (கா1ரண் ஶரீர்) முந்தைய வாழ்க்கையிலிருந்து முன்னோக்கி கொண்டு செல்லப்பட்ட ஸம்ஸ்காரங்கள் (போக்குகள்) உட்பட முடிவில்லாத கடந்தகால வாழ்க்கையின் செயல்களின் கணக்கைக் கொண்டுள்ளது
மரணத்தின் போது, ஆன்மா தனது ஸ்தூல சரீரத்தை உதறிவிட்டு, சூட்சும மற்றும் காரண சரீரங்களுடன் பிரிந்து செல்கிறது. பின்னர், கடவுள் ஆன்மாவுக்கு அதன் நுட்பமான மற்றும் காரண உடல்களுக்கு ஏற்ப மற்றொரு ஸ்தூல சரீரத்தை கொடுத்து, அந்த நோக்கத்திற்காக ஆன்மாவை பொருத்தமான தாயின் கருப்பையில் அனுப்புகிறார். ஆன்மா ஒரு ஸ்தூல உடலைக் பிரிந்த பிறகு, அது ஒரு புதிய ஸ்தூல உடலைப் பெறுவதற்கு முன் ஒரு இடைநிலைக் கட்டம் உள்ளது. இது ஒரு சில வினாடிகள் அல்லது சில வருடங்கள் நீடிக்கும். எனவே, பிறப்பதற்கு முன், ஆன்மா வெளிப்படுத்தப்படாத, நுட்பமான மற்றும் காரண உடல்களுடன் இருந்தது. மரணத்திற்குப் பிறகு, அது இன்னும் வெளிப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. அது நடுவில் மட்டும் தான் வெளிப்படுகிறது. எனவே மரணம் ஒரு துக்கத்திற்கான காரணமல்ல.