Bhagavad Gita: Chapter 2, Verse 52

யதா3 தே1 மோஹக1லிலம் பு3த்3தி4ர்வ்யதி11ரிஷ்யதி1 |

1தா33ன்தா1ஸி நிர்வேத3ம் ஶ்ரோத1வ்யஸ்ய ஶ்ருத1ஸ்ய ச1 ||52||

யதா—--எப்பொழுது;; தே—-- உன்; மோஹ—--மாயையின்;கலிலம்— --சூழலை;புத்திஹி—-- புத்தி;வ்யதிதரிஷ்யதி—-- கடக்குமோ;ததா—--அப்பொழுது; கன்தாஸி—--பெறுவாய்;நிர்வேதம்— --விருப்புவெறுப்பின்மை; ஶ்ரோதவ்யஸ்ய— --கேட்கப்பட வேண்டியவையிலிருந்தும்; ஶ்ருதஸ்ய—--கேட்டவையிலிருந்தும்; ச— --மற்றும்

Translation

BG 2.52: உன் புத்தி மாயையின் சூழலைக் கடக்கும்போது, ​​​​நீ கேட்டவை மற்றும் இன்னும் கேட்கப்பட வேண்டியவை (இம்மை மற்றும் மறுமையில் உள்ள இன்பங்கள்) பற்றி விருப்புவெறுப்பின்மை பெறுவாய்.

Commentary

உலக இன்பத்தில் பற்று கொண்டவர்கள், உலகச் செழுமையைப் பெறுவதற்கும், தேவலோக வாசஸ்தலங்களை அடைவதற்கும் ஆடம்பரமான சடங்குகளைப் பரிந்துரைக்கும் வேதங்களின் சொல்நயமிக்க வார்த்தைகளால் ஈர்க்கப்படுகிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு கூறியிருந்தார் (வசனம் 2.42-43). இருப்பினும், யார் ஒருவருடைய நுண்ணறிவு ஆன்மீக அறிவால் பிரகாசிக்கப்படுகிறதோ, அவர் ஜடப்பொருள் இன்பங்கள் துன்பத்தின் முன்னோடிகளாக இருப்பதை அறிந்துகொண்டு அவற்றின் இன்பங்களை தேடுவதில்லை. அப்படிப்பட்டவர் வேத சடங்குகளில் ஆர்வம் இழக்கிறார். முண்ட3கோப1நிஷத3ம் கூறுகிறது:

1ரிக்ஷ்ய லோகா1ன்க1ர்மசி1தா1ந்ப்3ராஹ்மணோ நிர்வேத3மாயான்னாஸ்த்1யக்ருத1

க்ருதே1ன (1.2.12)

‘உணர்ந்த ஞானிகள், பலன் கர்மாக்களால் ஒருவன் அடையும் இன்பங்கள், இம்மையிலும், தேவலோகத்திலும், தற்காலிகமானவை, துன்பம் கலந்தவை என்று புரிந்து கொண்டு வேத சம்பிரதாயங்களைத் தாண்டிச் செல்கின்றனர்.’

Watch Swamiji Explain This Verse