அத2 சை1னம் நித்1யஜாத1ம் நித்1யம் வா மன்யஸே ம்ருத1ம் |
த1தா2பி1 த்1வம் மஹாபா3ஹோ நைவம் ஶோசி1து1மர்ஹஸி ||26||
அத—--எனினும்; ச—--மற்றும்; ஏனம்—-- இந்த ஆன்மாவை நித்யஜாதம்—--நிலையான பிறவி எடுப்பது நித்யம்—-- எப்போதும்; வா—-அல்லது; மன்யஸே----நீ நினைத்தால்; ம்ருதம்—-இறந்த; ததா அபி--—அப்படியிருந்தும்; த்வம்—-- நீ; மஹாபாஹோ—--வலிமையான கைகளை உடைய அர்ஜுனனே; ந-—இல்லை; ஏவம்—-இப்படி; ஶோசிதும்-—துக்கம்; அர்ஹசி—பொருத்தமான
Translation
BG 2.26: எனினும், சுயம் நிலையான பிறப்பு மற்றும் இறப்புக்கு உட்பட்டது என்று நீ நினைத்தால், ஓ வலிமையான கைகளை உடைய அர்ஜுனனே, அப்படியிருந்தும் நீ இப்படி வருத்தப்படக்கூடாது.
Commentary
சுயத்தின் இயல்பைப் பற்றி இருக்கும் மற்ற விளக்கங்களை அர்ஜுனன் நம்ப விரும்பலாம் என்பதைக் குறிக்க ஸ்ரீ கிருஷ்ணர் அத என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இந்த வசனம் இந்தியாவில் நிலவும் தத்துவ அருவிகள் மற்றும் சுயத்தின் தன்மை பற்றிய அவற்றின் மாறுபட்ட புரிதல்களின் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தியத் தத்துவம் வரலாற்று ரீதியாக பன்னிரண்டு சிந்தனைப் பள்ளிகளை உள்ளடக்கியது. இவற்றில் ஆறு வேதங்களின் அதிகாரத்தை ஏற்று ஆஸ்தி1க்1 த3ரிஷனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை மீமாம்ஸம், வேதா3ந்த3ம், நியாயம், வைஶேஷிக்1,ஸாங்கி2யம் மற்றும் யோ3கம். இவை ஒவ்வொன்றிலும் பல கிளைகள் உள்ளன-உதாரணமாக, வேதாந்த சிந்தனைப் பள்ளி மேலும் ஆறு பள்ளிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது- அத்3வைத1 வாத3ம், த்3வைத1 வாத3ம், விஶிஷ்ட1த்3வைத1 வாத3ம், விஶுத்3தா4த்3வைத1 வாத3ம், த்3வைத1—அத்3வைத1 வாத3ம், மற்றும் அசி1ந்த்1ய-பே4தா3பேத3 வாத3ம். இவை ஒவ்வொன்றும் மேலும் பல கிளைகளைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக, அத்3வைத1 வாத3ம், தி3ருஷ்டி1-ஸ்ருஷ்டி1 வாத3ம், அவச்1சே2த3 வாதம், பி 3ம்ப3-ப்1ரதி1பி3ம்ப3 வாத3ம், விவர்த1 வாத3ம், அஜாத1 வாத3ம், மற்றும் பலவாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் இந்த பள்ளிகளின் விவரங்களை தவிர்த்து இந்த சிந்தனைப் பள்ளிகள் அனைத்தும் வேதங்களே ஆதாரமாக ஏற்றுக் கொள்கின்றன என்பதை இப்போதைக்கு தெரிந்துகொள்ள வேண்டும் . அதன்படி, அவர்கள் அனைவரும் நித்தியமான மாறாத ஆத்மாவை சுயமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்திய தத்துவத்தின் மீதமுள்ள ஆறு பள்ளிகள் வேதங்களின் அதிகாரத்தை ஏற்கவில்லை. இவை சா1ர்வாக்1 வாத3ம், நான்கு பௌத்த பள்ளிகள் (யோகா3ச்சார்1 வாத3ம், மாத்4யமிக்1 வாத3ம், வைபா4ஶிக்1 வாத3ம், மற்றும் ஸௌதா1ந்தி1ர வாத3ம்) மற்றும் ஜைன மதம். இவை ஒவ்வொன்றும் சுயத்தின் அதன் சொந்த விளக்கத்தைக் கொண்டுள்ளன. உடலே சுயத்தை உள்ளடக்கியதாக சா1ர்வாக்1 வாத3ம் கூறுகிறது.மேலும், உணர்வு என்பது அதன் உட்கூறுகளின் தொகுப்பின் விளைபொருளே ஆகும். ஜைன மதம் ஆன்மா உடலின் அளவைப் போன்றது என்றும் பிறப்பிலிருந்து பிறப்பு வரை மாற்றத்திற்கு உட்பட்டது என்றும் கூறுகிறது. பௌத்த சிந்தனைப் பள்ளிகள் நிரந்தர ஆன்மா இருப்பதை ஏற்கவில்லை, அதற்கு பதிலாக, வாழ்நாள் முதல் வாழ்நாள் வரை புதுப்பிக்கப்பட்ட உயிர் ஊட்ட தொடர் இயக்கம் என்று பராமரிக்கிறது, இது தனிநபரின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்திலும், சுயத்தின் புதுப்பிக்கப்பட்ட உயிர் ஊட்ட தொடர் இயக்க தத்துவம் (பௌத்த சிந்தனை) மற்றும் ஆன்மாவின் நிலையாமையின் பதிப்புகள் இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான், அர்ஜுனன், சுயத்தை வாழ்நாள் முதல் வாழ்நாள் வரை புதுப்பிக்கப்பட்ட உயிர் ஊட்ட தொடர்இயக்கம் என்ற தத்துவத்தை ஒப்புக்கொண்டாலும் , புலம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் விளக்குகிறார். ஒருவர் ஏன் புலம்பக்கூடாது? இது இப்போது அடுத்த வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது.