யத்3ருச்1ச2யா சோ1ப1ப1ன்னம் ஸ்வர்க3த்3வாரமபா1வ்ருத1ம் |
ஸுகி2ன: க்ஷத்1ரியா: பா1ர்த2 லப4ன்தே1 யுத்3த4மீத்3ருஶம் ||32||
யத்ருச்சயா—--தேடப்படாத; ச--—மற்றும்; உபபன்னம்—--வரும்; ஸ்வர்க—--தேவலோக;த்வாரம்—--கதவு; அபாவ்ருதம்—---பரந்து திறக்கும்; ஸுகினஹ—--மகிழ்ச்சியானவர்கள்; க்ஷத்ரியாஹா—--வீரர்கள்; பார்த—--ப்ரிதாவின் மகன், அர்ஜுனா; லபன்தே---பெறுபவர்கள்; யுத்தம்—--போர் ஈத்ரிஶம்—--இத்தகைய
Translation
BG 2.32: ஓ பார்த் சன்மார்க்கத்தை பாதுகாப்பதற்கான அத்தய வாய்ப்புகளை எதிர்பார்க்காமல் பெரும் போர் வீரர்களுக்கு தேவலோக வாசஸ்தலங்களின் படிகட்டுகள் திறக்கப்படுகின்றன.
Commentary
சமுதாயத்தைப் பாதுகாக்க போர்வீரர் வர்க்கம் எப்போதும் உலகில் அவசியம். போர்வீரர்களின் தொழில்சார் கடமைகள் அவர்கள் துணிச்சலானவர்களாகவும், தேவைப்பட்டால், சமூகத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையே கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்று கோருகின்றன. வேத காலங்களில், விலங்குகளைக் கொல்வது சமூகத்ததின் மற்ற உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்ட நிலையில் போர்வீரர்கள் காட்டுக்குச் சென்று மிருகங்களை கொன்று போர்ப் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய வீரப்பெருந்தகைமையுடைய வீரர்கள், நேர்மையைக் காக்கும் வாய்ப்பை இருகரம் நீட்டி வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் சிறந்த நற்பண்பு இம்மையிலும் மறுமையிலும் வெகுவாக மதிக்கப்படும்.
ஒருவரின் தொழில்சார் கடமைகளைச் சரியாகச் செயல்படுத்துவது ஒரு ஆன்மீகச் செயல் அல்ல, அது கடவுளை உணர்ந்து கொள்வதில் விளைவதில்லை. இது நேர்மறையான பொருள் வெகுமதிகளைக் கொண்ட ஒரு நல்ல செயல் மட்டுமே. ஸ்ரீ கிருஷ்ணர் தனது அறிவுரைகளை ஒரு படி கீழே கொண்டு வந்து, அர்ஜுனன் ஆன்மீக போதனைகளில் ஆர்வம் காட்டாவிட்டாலும், உடல் தளத்தில் நிலைத்திருக்க விரும்பினாலும், ஒரு போர்வீரனாக தனது சமூகக் கடமையும் நீதியைக் காக்க வேண்டும் என்று கூறுகிறார்.
நாம் காண்கிற படி, பகவத் கீதை ஒருசெயலுக்கான அழைப்பு, செயலற்ற நிலைக்கு அல்ல. ஆன்மிகம் பற்றிய விரிவுரைகளுக்கு மக்கள் வெளிப்படும் போது, 'என்னுடைய வேலையை விட்டுவிடச் சொல்கிறாயா?' என்று அடிக்கடி கேள்வி கேட்பார்கள், ஆனால், அடுத்த வசனமாக, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை செயலில் ஈடுபடத் தூண்டுகிறார், இது அவரது செயலைத் தவிர்க்கும் விருப்பத்திற்கு முரணானது. அர்ஜுன் தன் கடமையை கைவிட விரும்பும்போது, அதைச் செய்யுமாறு ஸ்ரீ கிருஷ்ணர் பலமுறை அவரைத் தூண்டுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் காண விரும்பும் மாற்றமானது, அவரது உணர்வில் உள்ள ஒரு மாற்றமே தவிர, வெளிப்புற வேலைகளைத் துறப்பது அல்ல. அவர் இப்போது அர்ஜுனனிடம் தன் கடமையை கைவிடுவதால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறார்.