யாவானர்த2 உத3பா1னே ஸர்வத1: ஸம்ப்1லுதோ1த3கே1 |
தா1வான்ஸர்வேஷு வேதே3ஷு ப்3ராஹ்மணஸ்ய விஜானத1: ||46||
யாவான்----எதுவாக இருந்தாலும்; அர்தஹ---நோக்கம் உதபானே—--ஒரு கிணற்றின் தண்ணீர்; ஸர்வதஹ--— எல்லா வகையிலும்; ஸம்ப்லுத-உதகே—--ஒரு பெரிய ஏரியால்; தாவான்—--அவை; ஸர்வேஷு--- அனைத்திலும்; வேதேஷு—--வேதங்களில்; ப்ராஹ்மணஸ்ய—--முழு உண்மையை உணர்ந்தவர்; விஜானதஹ—--முற்றிலும் அறிந்தவனாகத் திகழ்வார்
Translation
BG 2.46: ஒரு சிறிய கிணற்று நீர் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதோ, அது இயற்கையாகவே ஒரு பெரிய ஏரியால் வழங்கப்படுகிறது. அதுபோலவே, பூரண சத்தியத்தை உணர்ந்தவன் எல்லா வேதங்களின் நோக்கத்தையும் நிறைவேற்றுகிறான்.
Commentary
வேதங்களில் பலவிதமான சடங்குகள், நடைமுறைகள், பிரார்த்தனைகள், விழாக்கள் மற்றும் அறிவு ரத்தினங்களை விவரிக்கும் ஒரு லட்சம் அல்லது நூறாயிரம் மந்திரங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆன்மாவை கடவுளுடன் ஒன்றிணைக்க உதவும். ஒரே ஒரு குறிக்கோளுடன் கொடுக்கப்பட்டுள்ளன -
வாஸுதே3வ-ப1ரா வேதா3 வாஸுதே3வ-ப1ரா மகா2ஹா
வாஸுதே3வ-ப1ரா யோகா3 வாஸுதே3வ-ப1ராஹா க்1ரியாஹா
வாஸுதே3வ-ப1ரம் ஞானம் வாஸுதே3வ-ப1ரந் த1பஹ
வாஸுதே3வ-ப1ரோ த4ர்மோ வாஸுதே3வ-ப1ரா க3தி1ஹி
(பா4க3வத1ம் 1.2.28–29)
‘அனைத்து வேத மந்திரஙகள், சடங்கு நடவடிக்கைகள், ஆன்3மீக நடைமுறைகள், தியாகங்கள், அறிவை வளர்ப்பது, மற்றும் கடமைகளைச் செய்தல் ஆகியவற்றின் குறிக்கோள் ஆன்மா கடவுளின் தெய்வீக பாதங்களை அடைய உதவுவதாகும்.’
இருப்பினும், ஒரு மருந்து மாத்திரையை அதிக சுவையூட்டுவதற்காக பல முறை சர்க்கரை பூசப்படுவதைப் போலவே, தனிமனிதன் படிப்படியாக உலகத்திலிருந்து விலகி கடவுளுடன் இணைந்திருக்க உதவுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட வேதங்களும் பொருள் சிந்தனை உள்ளவர்களை ஈர்க்க, பொருள் ஊக்கத்தை அளிக்கின்றன. இவ்வாறு,, மனதைக் கடவுளிடம் இணைத்துக்கொண்டிருப்பவர் அனைத்து வேத மந்திரங்களின் நோக்கத்தையும் தானாகவே நிறைவேற்றுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவ்க்கு அறிவுரை கூறுகிறார்:
அஞானைவம் கு3ணான் தோ3ஷான் மாயாதி3ஷ்டா1ன் அபி1 ஸ்வகா1ன்
த4ர்மான் ஸந்த்1யஜ்ய யஹ ஸர்வான் மாம் ப4ஜேத1 ஸ ஸத்1த1மஹ
(பா4க3வத1ம்11.11.32)
‘வேதங்கள் சமூக மற்றும் சடங்கு கடமைகளின் வகைகளை பரிந்துரைக்கின்றன. ஆனால் அவர்களின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொண்டு, எல்லா இடைநிலை அறிவுரைகளையும் நிராகரிப்பவர்கள், என்னிடம் தங்கள் கடமையை முழு மனதுடன் நிறைவேற்றுகிறார்கள், அவர்களை நான் உயர்ந்த பக்தர்களாகக் கருதுகிறேன்.’