அத2 சே1த்1வமிமம் த4ர்ம்யம் ஸங்க்3ராமம் ந க1ரிஷ்யஸி |
த1த:1 ஸ்வத4ர்மம் கீ1ர்தி1ம் ச1 ஹித்1வா பா1ப1மவாப்1ஸ்யஸி ||33||
அத சேத்—--இருப்பினும்; த்வம்—--நீ; இமம்—--இந்த; தர்ம்யம்ஸங்க்ராமம்----நீதியான போரில்; ந—இல்லை; கரிஷ்யஸி—செயல்படு;ததஹ—--என்றால்; ஸ்வதர்மம்—--வேதங்களின்படி ஒருவரின் கடமை; கீர்திம்—--புகழை; ச—--மற்றும்; ஹித்வா—--இழந்து; பாபம்—--பாவத்தை; அவாப்ஸ்யஸி—--அடைவாய்; (நகரிஷ்யஸி—--ஈடுபடவில்லை)
Translation
BG 2.33: இருப்பினும், உன் சமூக கடமையையும் நற்பெயரையும் கைவிட்டு இந்த நேர்மையான போரில் ஈடுபட மறுத்தால், நீ நிச்சயமாக பாவத்தை சந்திக்க வேண்டும்.
Commentary
அதனால்தான் அர்ஜுனன் தன் கடமையை அருவருப்பானதாகவும், உறுத்தலாகவும் கருதி கைவிட்டு விட்டால் அவர் ஒரு பாவச் செயலை செய்தவராவார் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பராஶர ஸ்மிருதி கூறுகிறது:
க்ஷத்1ரியோஹோ ஹி ப்1ரஜா ரக்ஷான்ஶஸ்த்1ரபா1ணிஹி ப்1ரத3ண்டவான்
நிர்ஜித்1ய ப1ரஸைன்யாதி3 க்ஷிதி1ம் த4ர்மேண பா1லயேத்1 (1.61)
‘ஒரு போர்வீரனன் தொழில் கடமை நாட்டின் குடிமக்களை அடக்குமுறையிலிருந்து பாதுகாப்பதாகும். சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு உரிய சந்தர்ப்பங்களில் வன்முறையை பயன்படுத்துவது இதற்குத் தேவைப்படுகிறது. எதிரி அரசர்களின் வீரர்களை அவர் தோற்கடித்து, நீதியின் கொள்கைகளின்படி நாட்டை ஆள உதவ வேண்டும்.’