க1ர்மஜம் பு1த்3தி4யுக்1தா1 ஹி ப2லம் த்1யக்1த்1வா மனீஷிண: |
ஜன்மப3ந்த4விநிர்முக்1தா1: ப1த4ம் க3ச்1ச2ந்த்1யநாமயம் ||51||
கர்மஜம் பலன் தரும் செயல்களில் இருந்து பிறந்தது; புத்தியுக்தாஹா—--புத்தியின் சமநிலையைக் கொண்டவர்கள்; ஹி-----என; ஃபலம்— பலன்களை; த்யக்த்வா—---கைவிட்டு; மனீஷிணஹ—--ஞானமுள்ளவர்; ஜன்ம-பந்த-விநிர்-முக்தஹா—---வாழ்க்கை மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை; பதம்--— நிலையை; கச்சந்தி—--அடைகிறார்கள்; அநாமயம்—--துன்பங்கள் அற்றது.
Translation
BG 2.51: அறிவின் சமநிலையைக் கொண்ட மெய்யறிவார்ந்தவர்கள், வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் ஒருவரைப் பிணைக்கும் செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலைக் கைவிடுகிறார்கள். அத்தகைய உணர்வில் வேலை செய்வதன் மூலம், அவர்கள் எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைகிறார்கள்.
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர், செயல்களின் பலன்களின் மீது பற்று இல்லாமல் உழைப்பது என்ற தலைப்பில் தொடர்ந்து விளக்கி, அது ஒருவரை துன்பங்களுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு இட்டுச் செல்கிறது என்று கூறுகிறார். வாழ்க்கையின் முரண்பாடு என்னவென்றால், நாம் மகிழ்ச்சிக்காக பாடுபடுகிறோம், ஆனால் துன்பத்தை அறுவடை செய்கிறோம்; நாம் அன்பை விரும்புகிறோம், ஆனால் ஏமாற்றத்தை சந்திக்கிறோம்; நாம் வாழ்க்கையை விரும்புகிறோம், ஆனால் நாம் ஒவ்வொரு கணமும் மரணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். பாகவதம் கூறுகிறது:
ஸுகா1ய க1ர்மாணி க1ரோதி1 லோகோ1
ந தை1ஹி ஸுக2ம் வாந்யத்3 உபா1ரமம் வா
விந்தே3த1 பூ4யஸ் த1த1 ஏவ து3ஹ்க2ம்
யத்3 அத்1ர யுக்1த1ம் ப4க3வான் வதே3ன் நஹ (3.5.2)
‘ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியைப் பெறுவதற்காக பலன் தரும் செயல்களில் ஈடுபட்டாலும் திருப்தியை அடைவதில்லை. மாறாக, இந்தச் செயல்கள் துயரத்தையே அதிகப்படுத்துகின்றன.’ இதன் விளைவாக, நடைமுறையில் இந்த உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாக உள்ளனர். சிலர் தங்கள் சொந்த உடல் மற்றும் மனதின் துயரங்களால் பாதிக்கப்படுகின்றனர்; மற்றவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்; சிலர் செல்வப் பற்றாக்குறையாலும், வாழ்க்கைத் தேவைகளின் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுகின்றனர். பொருள் சார்ந்த எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் மகிழ்ச்சியற்றவர்கள் என்பதை அறிவார்கள். ஆயினும்கூட, மற்றோர் பொருள் வளர்ச்சியின் திசையில் ஓடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்கள் பொருள் வளர்ச்சியின் திசையில் தொடர்ந்து ஓடுகிறார்கள். இந்த குருட்டுத்தனமான நாட்டம் முடிவில்லா வாழ் நாட்களாக தொடர்ந்து வருகிறது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்களில் ஈடுபட்டு எவரும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்பதை உணர முடிந்தால், அவர்கள் தாங்கள் ஓடும் திசை பயனற்றது என்பதை உணர்ந்து அவர்கள் ஆன்மீக வாழ்வில் திருப்பத்தை மேற்கொள்ள நினைப்பார்கள்.
எவருடைய நுண்ணறிவு ஆன்மீக அறிவுடன் உறுதியாகிவிட்டதோ, அவர்கள் அனைத்தையும் மகிழ்பவர் கடவுள் என்பதை புரிந்து கொள்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலைத் துறந்து, எல்லாவற்றையும் அவருக்கு அர்ப்பணித்து, அவருடைய ப்ரசாதமாக (கருணை) வரும் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களின் செயல்கள் கர்ம வினைகளிலிருந்து விடுபடுகின்றன, இது ஒருவரை பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் பிணைப்பிலிருந்து விடுவிக்கிறது.