Bhagavad Gita: Chapter 2, Verse 40

நேஹாபி4க்1ரமனாஶோ‌ஸ்தி1 ப்1ரத்1யவாயோ ந வித்3யதே1 |

ஸ்வல்ப1மப்1யஸ்ய த4ர்மஸ்ய த்1ராயதே1 மஹதோ14யாத்1 ||40||

ந--—இல்லை; இஹ—--இதில்;அபிக்ரமஹ—--முயற்சிகளில் நாஶஹ----இழப்பு அஸ்தி—--இருக்கிறது;--; ப்ரத்யவாயஹ—-- பாதகமான விளைவு; ந—--இல்லை; வித்யதே—ஆகும்; ஸு-அல்பம்--— சிறிதளவு; அபி—--கூட; அஸ்ய—--இதனுடைய;தர்மஸ்ய—--தொழில் ;த்ராயதே—-- காப்பாற்றுகிறது; மஹதஹ—-- பெரிய; பயாத்—--ஆபத்திலிருந்து;

Translation

BG 2.40: இந்த உணர்வு நிலையில் வேலை செய்வதால், இழப்பு அல்லது பாதகமான விளைவு எதுவும் இல்லை, மேலும் ஒரு சிறிய முயற்சி கூட பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறது.

Commentary

அடுத்த ஜன்மத்தில் மானிட தேகம் கிடைக்காமல் போவது தான் நம்மை எதிரிடும் பெரிய ஆபத்து; அதற்கு பதிலாக, நாம் விலங்குகள், பறவைகள் அல்லது அருகிலுள்ள பகுதிகளில் உள்ள வாழ்க்கை வடிவங்கள் போன்ற கீழ் உயிரினங்களுக்கு செல்லலாம். மானிட உருவம் நமக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என்று நாம் திருப்தியடைய முடியாது, ஏனென்றால், அடுத்த பிறவி இந்த வாழ்க்கையில் நமது செயல்கள் மற்றும் உணர்வு நிலைகளால் தீர்மானிக்கப்படும்.

எண்பத்திநான்கு லட்ச உயிரினங்கள் இருப்பில் உள்ளன. மனிதர்களுக்குக் கீழே உள்ள உயிரினங்கள் -- விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள் மற்றும் மற்ற அனைத்தும்-மனிதர்களாகிய நம்மைப் போல வளர்ந்த அறிவுத்திறனைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், உண்ணுதல், உறங்குதல், பாதுகாத்தல், மற்றும் இனச்சேர்க்கை போன்ற பொதுவான செயல்களை அவைகளும் செய்கின்றன. மனிதர்களுக்கு ஒரு உன்னத நிலையை அடைவதற்கான வாய்ப்பை அளிக்கும் உயர்ந்த நோக்கத்துடன் மனிதர்கள் அறிவுத்திறனை பெற்றுள்ளனர். விலங்குகளை போல மனிதர்கள் தங்கள் புத்தியை உண்ணுதல், உறங்குதல், இனச்சேர்க்கை செய்தல், காத்தல் போன்ற செயல்களைச் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தினால் அது இந்த அரிதான மானிட வாழ்க்கையை தவறாக பயன்படுத்துவதற்கு சமம். உதாரணமாக, ஒருவர் உண்பதை வாழ்வின் முதன்மையான இன்பமாக்கினால், ஒரு பன்றியின் உடல் அத்தகைய நபருக்கு மிகவும் பொருத்தமானதாக மாறும், இதனால், அந்த நபர் அடுத்த வாழ்க்கையில் ஒரு பன்றியின் உடலைப் பெறுகிறார். யாராவது உறங்குவதை வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டால், துருவ கரடியின் உடல் அத்தகைய செயலுக்கு மிகவும் பொருத்தமானது என்று கடவுள் கருதி, அதை அடுத்த வாழ்க்கையில் அவருக்கு துருவ கரடியின் உடலை ஒதுக்குகிறார். எனவே, அடுத்த ஜன்மத்தில் மனிதப் பிறவி கிடைக்காமல் போவதுதான் சந்திக்க இருக்கும் மிகப் மிகப் பெரிய அபாயம். வேதங்கள் கூறுகின்றன:

இஹ சே13வெதீ 332 ஸத்1யமஸ்தி1 ந சே1தி3ஹாவேதீ3ந்மஹதீ1 வினஷ்டி1ஹி

(கே1னோப1நிஷத3ம் 2.5)

‘மனிதனே, மனிதப் பிறவி ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் இலக்கை அடைய நீங்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் பெரும் அழிவை சந்திப்பீர்கள்.’ மீண்டும் அவை கூறுகின்றன:

இஹ சே13ஶக1த்3 போ3த்43ம் ப்1ராக்1ஶரீரஸ்ய விஸ்ரஸஹ

11ஹ ஸர்கே3ஷு லோகே1ஷு ஶரீரத்1வாய க1ல்ப1தே1

(க1டோ2பநிஷத3ம் 2.3.4)

‘இந்தப் பிறவியில் இறைவனை அடைய பாடுபடாவிட்டால், எண்பத்திநான்கு லட்ச உயிர்களில் பல பிறவிகளுக்குச் சுழன்று கொண்டே இருப்பீர்கள்.’

இருப்பினும், நாம் ஆன்மீகப் பயிற்சியின் பயணத்தைத் தொடங்கியவுடன், இந்த வாழ்க்கையில் நாம் பயணத்தைத் முடிக்காவிட்டாலும், அவ்வாறு செய்வதற்கான நமது எண்ணம் இருப்பதை கடவுள் காண்கிறார். இதன் விளைவாக, நாம் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து செல்ல அவர் நமக்கு மீண்டும் மனிதப் பிறப்பை வழங்குகிறார். இதன் மூலம், பெரும் ஆபத்தை தவிர்க்கிறோம்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணர், இந்தப் பாதையில் மேற்கொள்ளும் எந்த முயற்சியாலும் இழப்பு ஏற்படாது என்று கூறுகிறார். ஏனென்றால், தற்போதைய வாழ்க்கையில் நாம் குவிக்கும் பொருள்கள் அனைத்தும் மரணத்தின் போது விட்டுவிடப்பட வேண்டும். ஆனால், யோகப் பாதையில் நாம் ஏதேனும் ஆன்மீக முன்னேற்றம் செய்தால், கடவுள் அதைப் பாதுகாத்து, நாம் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடங்குவதற்கு அடுத்த ஜென்மத்தில் நமக்கு பலன்களைத் தருகிறார், இவ்வாறு, அதன் பலன்களைப் பற்றி அர்ஜுனனுக்குத் தெரிவித்த ஸ்ரீ கிருஷ்ணர், இப்போது பற்றுதல் இல்லாமல் வேலை செய்யும் அறிவியலைப் பற்றி அவருக்கு அறிவுறுத்தத் தொடங்குகிறார்.

Watch Swamiji Explain This Verse