ய ஏனம் வேத்1தி1 ஹன்தா1ரம் யஶ்சை1னம் மன்யதே1 ஹத1ம் |
உபௌ4 தௌ1 ந விஜானீதோ1 நாயம் ஹன்தி1 ந ஹன்யதே1 ||19||
யஹ----எவரொருவர்;; ஏனம்---—இதை; வேத்தி--—கருதுகிறாரோ; ஹன்தாரம்—-- கொலை செய்பவர் என்று; யஹ--—ஒருவர்; ச--—மற்றும்;; ஏனம்----இதை; மன்யதே—--எண்ணுகிறாரோ; ஹதம்—--கொல்லப்பட்டவர் என்று; உபௌ—--இருவருமே; தௌ—--அவர்கள்; ந—-இல்லை; விஜானித: அறிவி;ல் ந-—இல்லை; அயம்—-இது; ஹந்தி—- கொல்வதோ; ந-—இல்லை ஹன்யதே—--கொல்லப்படுபடுவதோ; (ந விஜானீதஹ—--அறியாதவர்கள்)
Translation
BG 2.19: ஆன்மாவால் கொல்ல முடியும் அல்லது ஆன்மாவைக் கொல்ல முடியும் என்று நினைக்கும் இருவருமே விவரமறிந்தவரல்ல. உண்மையில், ஆன்மா கொல்வதோ அல்லது கொல்லப் கொல்லப்படுபடுவதோ இல்லை.
Commentary
உடலுடன் நம்மை அடையாளப்படுத்துவதால் மரணம் என்ற மாயை உருவாகிறது. ராமாயணம் இதைப் பின்வருமாறு விளக்குகிறது:
ஜௌ ஸப1னே ஸிர கா1டை கோ1யீ, பி3னு ஜாகே3ன் நா தூ3ரி துஹ் ஹோயீ
‘தலை வெட்டப்பட்டதாகக் கனவு கண்டால், விழிக்கும் வரை அதன் வலியை உணருவோம்.’ கனவில் நிகழ்வது ஒரு மாயைதான். ஆனால் அந்த வலியின் அனுபவம் நாம் விழித்தெழுந்து மாயையை அகற்றும் வரை வேதனையைத் தொடர்கிறது. அதுபோலவே, நாம் உடல்தான் என்ற மாயையில், மரண அனுபவத்தைக் கண்டு அஞ்சுகிறோம். மாயை நீங்கிய ஞான ஆன்மாவிற்கு, இந்த மரண பயம் நீங்குகிறது.
யாராலும் யாரையும் கொல்ல முடியாது என்றால், கொலை ஏன் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது? பதில் என்னவென்றால், உடல் ஆன்மாவின் வாகனம் மற்றும் எந்தவொரு உயிரினத்தின் வாகனத்தையும் அழிப்பது வன்முறை. இது தடைசெய்யப்பட்டுள்ளது. வேதங்கள் தெளிவாக அறிவுறுத்துகின்றன: ‘மா ஹின்ஸ்யாத்1 ஸர்வ பூ4தா1னி ' 'யாரிடமும் வன்முறை செய்யாதே.' உண்மையில், வேதங்கள் விலங்குகளைக் கொல்வதைக்கூட வன்முறையாக கருதுகிறது ஆனால் சில சந்தர்ப்பங்களில் விதிகள் மாறி வன்முறை கூட அவசியமாகிறது. உதாரணமாக, ஒரு பாம்பு கடிக்க நெருங்கும் சமயங்களில் அல்லது ஒருவர் கொடிய ஆயுதங்களால் தாக்கப்பட்டால் அல்லது ஒருவரது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டால் தற்காப்புக்காக வன்முறை அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், அர்ஜுனனுக்கு வன்முறை மற்றும் அகிம்சையின் இடையில் எது பொருத்தமானது மற்றும் ஏன் பொருத்தமானது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையின் உரையாடல் முன்னேறும்போது விரிவாக விளக்குவார். மேலும் விளக்கம் அளிக்கும்போது விலை மதிப்பற்ற தெய்வீக அறிவு வெளிப்படும்.