ப4யாத்3ரணாது3ப1ரத1ம் மன்ஸ்யன்தே1 த்1வாம் மஹாரதா2: |
யேஷாம் ச1 த்1வாம் ப3ஹுமதோ1 பூ4த்1வா யாஸ்யஸி லாக4வம் ||35||
பயாத்—--பயத்தினால்; ரணாத்—-போர்க்களத்திலிருந்து; உபரதம்—--ஓடி-விட்டதாக; மன்ஸ்யன்தே—-எண்ணுவார்கள்; த்வாம்—உன்னை; மஹாரதாஹ—--பத்தாயிரம் சாதாரண வீரர்களுக்கு சமமான வீரமிக்க தளபதிகள்; யேஷாம்—--எவர்களுக்கு; ச—-மற்றும்; த்வம்—--நீ; பஹுமதஹ—--உயர்வாக மதிக்கப்படுபவன்; பூத்வா—-- இருந்து; யாஸ்யஸி--—நீ இழப்பாய்; லாகவம்—--மதிப்பு குறைந்து.
Translation
BG 2.35: உன்னை உயர்வாக மதிப்பிடும் வீரமிக்க தளபதிகள் நீ போர்க்களத்திலிருந்து பயந்து ஓடி விட்டதாக எண்ணுவார்கள். இதனால், உன் மீதான மரியாதையை இழக்க நேரிடும்.
Commentary
வீரமுற்ற அர்ஜுனன் ஒரு வலிமைமிக்க வீரனாகவும் மற்றும் மிகவும் வீரமிக்க வீரர்களான பீஷ்மர், துரோணாச்சாரியர், கர்ணன், போன்ற கௌரவ வீரர்களுக்கு கூட எதிராக போரிட தகுதியான போர் வீரராக பிரபலமானவர். பல தேவலோக தேவர்களுடன் போரிட்டு புகழ் பெற்றார். ஒரு சமயம், வேட்டைக்காரன் வேடத்தில் தோன்றிய சிவபெருமானைக்கூட அவர் போரிட்டு வீழ்த்தினார். அவரது வீரம் மற்றும் திறமையால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு பா1ஸுப1தா1ஸ்தி1ரம் என்ற தேவலோக ஆயுதத்தை பரிசாக அளித்தார். அவரது வில்லாண்மை ஆசிரியரான துரோணாச்சாரியரும் அவருக்கு ஒரு சிறப்பு ஆயுதத்தின் வடிவில் தனது ஆசிகளை வழங்கினார். போர் தொடங்கும் முன் அர்ஜுனன் போர்க்களத்தில் இருந்து விலகினால், தன் உறவினர்களின் உயிரின் மீதான அக்கறையே அவரை தப்பி ஓட தூண்டியது என்பதை இந்த வீரமிக்க வீரர்கள் எப்போதாவது அறிவார்களா? அவர்கள் அவரை கோழையாக கருதி, அவர் தங்கள் வலிமைக்கு பயந்து போரில் இருந்து பின்வாங்கிவிட்டார் என்று அனுமானம் செய்வார்கள்.