அன்த1வன்த1 இமே தே3ஹா நித்1யஸ்யோக்1தா1: ஶரீரிண: |
அனாஶினோப்1ரமேயஸ்ய த1ஸ்மாத்3யுத்4யஸ்வ பா4ரத1 ||18||
அன்த-வன்தஹ—-அழியக் கூடியவை; இமே தேஹாஹா---இவ்வுடல்கள்; நித்யஸ்ய—-நித்தியமானதுடையதைப்பற்றி; உக்தாஹா—--கூறப்பட்டது; ஶரீரிணஹ—--உள்ளிருக்கும் ஆன்மா; அனாஶினஹ—--அழிக்க முடியாத; அப்ரமேயஸ்ய—--அளவிட முடியாத; தஸ்மாத்---எனவே; யுத்யஸ்வ—-- போரிடு; பாரத—--ஓ, பரத வம்சத்தில் தோன்றியவனே
Translation
BG 2.18: ஸ்தூல உடல் மட்டுமே அழியக் கூடியது. உள்ளிருக்கும் ஆன்மா அழியாதது, அளவிட முடியாதது, மற்றும் நித்தியமானது. எனவே, ஓ, பரத வம்சத்தில் தோன்றியவனே, போரிடு.
Commentary
ஸ்தூலகாயம் ( உடல்) உண்மையில் சேற்றில் இருந்து உருவானது. இது காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் புல் என மாற்றப்படுகிறது. பசுக்கள் புல் மேய்ந்து பால் சுரக்கின்றன. மனிதர்களாகிய நாம் இந்த உணவை உட்கொள்கிற பொழுது அவை நம் உடலாக மாறுகிறது. எனவே, உடல் சேற்றில் இருந்து உருவானது என்று சொன்னால் அது மிகையாகாது.
மரணத்தின் போது, ஆன்மா வெளியேறும் பொழுது, உடல் மூன்று முடிவுகளில் ஒன்றை கொண்டிருக்கலாம்: ஒன்று எரிக்கப்பட்டால், அது சாம்பலாக மாறி சேற்றாக மாறும். அல்லது அது புதைக்கப்பட்டால், பூச்சிகள் அதை உணவாக உட்கொண்டு சேற்றாக மாற்றும். இல்லையெனில், அது ஆற்றிலோ கடலிலோ வீசப்பட்டால், கடல்வாழ் உயிரினங்களின் தீவனமாக மாறி கழிவுகளாக வெளியேறுகின்றன. இது இறுதியில் கடற்பரப்பின் சேற்றுடன் கலக்கிறது.
இந்த முறையில், மண் ஒரு அற்புதமான சுழற்சியை உலகில் பெறுகிறது. இது உண்ணக்கூடிய பொருட்களாக மாறுகிறது, இந்த உண்ணக்கூடிய பொருட்களிலிருந்து உடல்கள் உருவாக்கப்படுகின்றன, மேலும், உடல்கள் மீண்டும் சேற்றில் செல்கின்றன. பைபிள் சொல்கிறது: ‘நீ மண்ணாய் இருக்கிறாய், .மண்ணுக்குத் திரும்புவாய்.’ (ஆதியாகமம் 319) இந்த சொற்றொடர் ஜடஉடலைக் குறிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடம் கூறுகிறார், ‘அந்த ஜட உடலுக்குள் சேற்றால் ஆகாத அழியாத ஒரு பொருள் இருக்கிறது. அதுதான் தெய்வீக ஆத்மா, உண்மையான சுயம்.’