கு3ரூனஹத்1வா ஹி மஹானுபா4வான்
ஶ்ரேயோ போ4க்1து1ம் பை4க்ஷ்யமபீ1ஹ லோகே1 |
ஹத்1வார்த2கா1மான்ஸ்து1 கு3ருனிஹைவ
பு4ஞ்ஜீய போ4கா3ன் ருதி4ரப்1ரதி3க்3தா4ன் ||5||
குரூன்—--ஆசிரியர்களை; அஹத்வா—-;கொல்லாமல் ஹி—--நிச்சியமாக; மஹா-அனுபாவான்—--உன்னத பெரியவர்கள்; ஶ்ரேயஹ—--சிறந்தது; போக்தும்—--வாழ்க்கையை அனுபவிப்பது; பைக்ஷ்யம்—--பிச்சை எடுப்பது; அபீ—--விட; இஹ லோகே—--இந்த உலகில்; ஹத்வா--—கொன்று; அர்த---ஆதாயம்;; காமான்--—விரும்புவது; து—--ஆனால்; குரூன்-—--ஆசிரியர்களை; இஹ-—--இவ்வுலகில்; ஏவ-—-நிச்சியமாக; புஞ்ஜீய-—அனுபவிக்கும்; போகான்-—இன்பங்கள்;ருதிர--—இரத்தத்தால்; ப்ரதிக்தான்---கறைபடும்
Translation
BG 2.5: என்னுடைய ஆசிரியர்களான இந்த உன்னத பெரியவர்களைக் கொன்று வாழ்க்கையை அனுபவிப்பதை விட இந்த உலகில் பிச்சை எடுத்து வாழ்வது சிறந்தது. அவர்களைக் கொன்றால், நாம் அனுபவிக்கும் செல்வமும், இன்பமும் இரத்தத்தால் கறைபடும்.
Commentary
அர்ஜுனன் தனது வாழ்வாதாரத்தை தக்க வைக்கும் பொருட்டு போராடி ராஜ்யத்தை வெல்ல வேண்டும் என்று வாதிடலாம். ஆனால் அர்ஜுனன் அந்த எண்ணத்தை இங்கே மறுக்கிறார். இந்தக் கொடிய குற்றத்தைச் செய்வதை விட பிச்சை எடுத்து வாழ்வதையே விரும்புவதாகச் சொல்கிறார். மேலும், தனது பெரியோர்களையும் உறவினர்களையும் கொல்லும் இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டால், செல்வம் மற்றும் அதிகாரம் போன்ற எந்த ஒரு செயலின் பலனையும் இந்த உலகில் அனுபவிக்க மனசாட்சி அனுமதிக்காது என்று அவர் மேலும் நம்புகிறார்.
ஷேக்ஸ்பியரின் நாடகமான மக்பத், ஒழுக்கக்கேடான நடத்தையால் வரும் எந்தவொரு செல்வத்தையும் அதிகாரத்தையும் அனுபவிப்பது ஒருபுறம் இருக்க, குற்ற உணர்ச்சியால் தவிக்கும் ஒருவரால் இயற்கையான தூக்கத்தை கூட அனுபவிக்க முடியாது என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஸ்காட்லாந்தின் பிரபுவாகிய மக்பத் ஒருமுறை ஸ்காட்லாந்தின் அரசர் பயணம் செய்துகொண்டிருந்தபோது இரவு நேரத்தில் அவரது வீட்டில் ஓய்வெடுக்க வந்தபோது மக்பத்தின் மனைவி அவரை ராஜாவை கொலை செய்து அரியணையை கைப்பற்றும்படி தூண்டினார். மக்பத் அவளது அறிவுறையால் மயங்கி ராஜாவை படுகொலை செய்தார், அதன்பிறகு, அவரும் லேடி மக்பத்தும் ஸ்காட்லாந்தின் ராஜா மற்றும் ராணியாக முடிசூட்டப்பட்டனர். இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, மக்பத் தனது அரண்மனையில் இரவில் உறக்கமின்றி கண்விழித்து இருப்பதை காண முடிந்தது. ஆசிரியர் எழுதுகிறார், 'மக்பத் தூக்கத்தைக் கொன்றுவிட்டான், அதனால் மக்பத் இனி தூங்கமாட்டான்.' ராணி கற்பனை இரத்தக் கறைகளை அகற்றுவது போல் மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவுவதைக் காணலாம். இந்த வசனத்தில், அர்ஜுனன் இந்த உன்னத பெரியவர்களைக் கொன்றால், அவருடைய மனசாட்சி அவர்களின் ரத்தத்தால் கறை பட்டு ராஜ்யத்தை ஆளும் அனைத்து அரச பலன்களையும் அனுபவிக்க அவரை அனுமதிக்காது என்று பரிதவிப்புடன் கூறுகிறார்.