த்4யாயதோ1 விஷயான்பு1ம்ஸ: ஸங்க3ஸ்தே1ஷூப1ஜாயதே1 |
ஸங்கா3த்1ஸந்ஜாயதே கா1ம: கா1மாத்1க்1ரோதோ4பி4ஜாயதே1 ||62||
த்யாயதஹ—--சிந்திக்கும்போது; விஷயான்—- புலன்களின் பொருள்களை; பும்ஸஹ—-ஒருவரின்; ஸங்கஹ—-பற்றுதல்; தேஷூ—-அவற்றில் (புலன்களின் பொருள்கள்); உபஜாயதே— எழுகிறது; ஸங்காத்— பற்றுதலிருந்து ; ஸந்ஜாயதே— வளர்கிறது; காமஹ—ஆசை; காமாத்-— ஆசையிலிருந்து; க்ரோதஹ—-கோபம்; அபிஜாயதே— எழுகிறது
Translation
BG 2.62: புலன்களின் பொருள்களைப் பற்றி சிந்திக்கும்போது, அவற்றின் மீது பற்று வளர்கிறது. பற்றுதல் ஆசைக்கு வழிவகுக்கிறது, ஆசையிலிருந்து கோபம் எழுகிறது.
Commentary
கோபம், பேராசை, காமம் போன்றவை வேத சாஸ்திரங்களில் மானஸ ரோகம் அல்லது மனநோய் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. ராமாயணம் கூறுகிறது:
மானஸ் ரோக3 க1சு2க மே கா3ய ஹஹீன் ஸப3 கே1 லகி 2 பி 3ரலென்ஹ பா1ய
உடலின் நோய்களைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. ஒரு உடல் நோய் கூட ஒருவரின் முழு நாளையும் துன்பப்படுத்தும் ஆற்றல் கொண்டது - ஆனால் நாம் பல மன நோய்களால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம் என்பதை நாம் உணரவில்லை. மேலும் காமம், கோபம், பேராசை போன்றவற்றை மனநோய்களாக அடையாளம் காணாததால், அவற்றைக் குணப்படுத்த முயலுவதில்லை. உளவியல் என்பது மனித அறிவின் ஒரு கிளை ஆகும், இது இந்த நோய்களை பகுப்பாய்வு செய்து அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிகிறது. இருப்பினும், மேற்கத்திய உளவியலால் முன்வைக்கப்படும் பகுப்பாய்வு மற்றும் தீர்வு ஆகிய இரண்டும், மனதின் யதார்த்தத்தின் மொத்த தோராயமாகத் தோன்றுகின்றன. இது திருப்தி அளிப்பதாக இல்லை.
இதிலும் இதைத் தொடர்ந்து வரும் வசனத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் மனதின் செயல்பாட்டை பற்றிய முழுமையான மற்றும் ஊடுருவும் நுண்ணறிவைக் கொடுத்துள்ளார். ஏதோ ஒரு பொருளில் மகிழ்ச்சி இருக்கிறது என்று திரும்பத் திரும்ப எண்ணும் போது, மனம் அதில் பற்று கொள்கிறது என்று விளக்குகிறார். உதாரணமாக, ஒரு வகுப்பில் பல ஆண்களும் பெண்களும் உள்ளனர், மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் தீங்கற்ற முறையில் தொடர்பு கொள்கிறார்கள். ஒரு நாள் ஒரு பையன் ஒரு பெண்ணைப் பற்றி ஏதோ ஒன்றைக் கவனித்து, 'அவள் என்னுடையவளாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்று நினைக்கத் தொடங்குகிறான். அவன் தன் நண்பர்களிடம் அவளை வெறித்தனமாக காதலிப்பதாகவும், அவனது மனம் திரும்பத் திரும்ப அவளிடம் செல்வதால் அவனால் படிக்க முடியவில்லை என்றும் கூறுகிறான். வகுப்பில் அனைவரும் அவளுடன் பழகுகிறார்கள், அவன் மாதிரி பித்து பிடிக்கவில்லை- என்று அவனது நண்பர்கள் அவனை கேலி செய்கிறார்கள். அவளால் ஏன் தூக்கத்தை தொலைத்து தன் எதிர்காலத்தை பாழாக்குகிறான்? அந்த பெண்ணுடன் தான் மகிழ்ச்சியாக இருப்பான் என்று திரும்பத் திரும்ப எண்ணி அவனது மனம் அவளுடன் இணைந்தது என்பதுதான் உண்மை.
இப்போது, இணைப்பு மிகவும் தீங்கற்றதாக தோன்றுகிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், பற்றுதலிலிருந்து ஆசை வருகிறது. ஒருவருக்கு குளிர்பானங்கள் மீது பற்று இருந்தால், குளிர்பானத்தின் மீது ஆசை மீண்டும் மீண்டும் மனதில் தோன்றும். ஒருவருக்கு சிகரெட் பிடிக்கும் பட்சத்தில், சிகரெட் பிடிப்பதில் உள்ள இன்பத்தைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனதில் பாய்ந்து, அவற்றுக்கான மனதின் ஏக்கத்தை அதிகப்படுத்தும். இந்த வழியில், பற்றுதல் ஆசைக்கு வழிவகுக்கிறது.
மற்றும் கோபம், பேராசை ஆகிய இரண்டு பிரச்சனைகளை பிறப்பிக்கிறது. பேராசை ஆசையை நிறைவேற்றுவதிலிருந்து வருகிறது. ஜிமி ப்1ரதி1லாப4 லோப4 அதி4கா1யீ (ராமாயணம்) ‘ஆசையைத் திருப்திப்படுத்தினால் அது பேராசையை உண்டாக்கும்.’ அதை திருப்திப்படுத்துவதன் மூலம் ஆசை ஒருபோதும் நீங்காது:
யத்1 ப்1ருதி2வ்யாம் வ்ரீஹி-யவம் ஹிரண்யம் ப1ஶவஹ ஸ்த்1ரியஹ
ந து3ஹ்யந்தி1 மநஹ ப்1ரீதி1ம் பு1ம்ஸஹ கா1மஹத1ஸ்ய தே1
(பா4க3வத1ம்-9.19.13)
‘உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும், ஆடம்பரங்களையும், ஐம்புலன்களையும் ஒருவர் பெற்றாலும், அந்த நபரின் ஆசை தணியாது. எனவே, அது துன்பத்திற்குக் காரணம் என்று அறிந்து, அறிவுள்ளவன் ஆசையைத் துறக்க வேண்டும்’.
மறுபுறம், ஆசை நிறைவேறத் தடை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அது கோபத்தை உண்டாக்குகிறது. கோபம் தானாக எழுவதில்லை மாறாக ஆசை நிறைவேறாததால் உருவாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றும் பற்றுதலிலிருந்து ஆசை எழுகிறது, அதே சமயம் பற்றுதல் புலன் பொருள்களின் சிந்தனையிலிருந்து வருகிறது. இவ்வாறே, புலன்களின் இன்பங்களைச் சிந்தித்துப் பார்க்கும் எளிய செயல் பேராசை மற்றும் கோபம் என்ற இரட்டை நோய்களுக்கு எவ்வாறு கீழ்நோக்கி இட்டுச் செல்கிறது என்பதைப் பார்க்கிறோம். அடுத்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் இந்த சிந்தனையை மேலும் தொடர்கிறார் மற்றும் கோபத்தின் விளைவுகளை விளக்குகிறார்.