ஸுக2து3:கே2 ஸமே க்1ருத்1வா லாபா4லாபௌ4 ஜயாஜயௌ |
த1தோ1 யுத்3தா4ய யுஜ்யஸ்வ நைவம் பா1ப1மவாப்1ஸ்யஸி ||38||
ஸுக—--மகிழ்ச்சியிலும்; துஹ்கே--— துன்பத்திலும்; ஸமே க்ருத்வா—--சமமாக கருதி; லாப-அலாபௌ—-- ஆதாயம் மற்றும் இழப்பு; ஜய-அஜயௌ---வெற்றி மற்றும் தோல்வி; ததஹ----அதன்பின்;யுத்தாய— --போராடுவதற்காக; யுஜ்யஸ்வ— --ஈடுபடு; ;ந—ஒருபோதும் ஏவம்— --இவ்வாறு; பாபம்—-- பாவம்; அவாப்ஸ்யசி----ஏற்படும்; (ந அவாப்ஸ்யஸி—--நீ அடையமாட்டாய் )
Translation
BG 2.38: மகிழ்ச்சி மற்றும் துன்பம், இழப்பு மற்றும் லாபம், வெற்றி மற்றும் தோல்வியை ஒரே மாதிரியாக கருதி, கடமைக்காக போராடு. இவ்வாறு நீ பொறுப்பை நிறைவேற்றினால் ஒரு பொழுதும் பாவம் செய்தவன் ஆக மாட்டாய்.
Commentary
இவ்வுலக அளவில் அர்ஜுனனை ஊக்கப்படுத்திய பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது எளிதில் உணரமுடியாத தொழில் அறிவியலை விளக்குகிறார். தன் எதிரிகளைக் கொன்றால் பாவம் வந்துவிடுமோ என்ற பயத்தை அர்ஜுனன் வெளிப்படுத்தினார். இந்த அச்சத்தை ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிட்டு, அர்ஜுனன் செயல்களின் பலன்களில் பற்று இல்லாமல் தனது கடமையைச் செய்யும்படி அறிவுறுத்தி, இத்தகைய வேலை செய்வதற்கான மனப்பான்மை அவரை எந்த பாவமான எதிர்வினைகளிலிருந்தும் விடுவிக்கும் என்று கூறுகிறார்.
நாம் சுயநல நோக்கங்களுடன் பணிபுரியும் பொழுது, நாம் முன்வினை பயன்களை உருவாக்குகிறோம், அது அவற்றின் அடுத்தடுத்த முன்வினைப் பயன் வினைகளைக் கொண்டுவருகிறது. மாத2ர் ஸ்ருதி1 கூறுகிறது.
பு1ண்யேன பு1ண்ய லோக1ம் நயதி1 பா1பே1ன பா1ப1முபா4ப்4யாமேவ மனுஷ்யலோக1ம்
‘நீ நற்செயல்கள் செய்தால் தேவலோகம் செல்வாய்; கெட்ட செயல்களைச செய்தால், நீ தாழ்ந்த நிலைகளுக்குச் செல்வாய்; இரண்டையும் கலந்து செய்தால், நீ மீண்டும் பூமிக்கு வருவாய்.' இரண்டிலும், நாம் முன்வினைப் பயன் வினைளுக்குக் கட்டு படுகிறோம். இவ்வகையாக, இவ்வுலக நற்செயல்களும் கட்டுப்படுத்துகிறது. இவை பொருள் வெகுமதிகளை விளைவித்து நமது முன்வினைப் பயன்களின் கையிருப்பில் சேர்க்கிறது. மற்றும் உலகில் மகிழ்ச்சி இருக்கிறது என்ற மாயையை இன்னும் வலுப்படுத்துகிறது.
இருப்பினும், நாம் சுயநல நோக்கங்களைக் கைவிட்டால், நமது செயல்கள் கர்ம வினைகளை உருவாக்காது. உதாரணமாக, கொலை ஒரு பாவம், உலகின் ஒவ்வொரு நாட்டின் நீதித்துறை சட்டம் அதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கிறது. ஆனால், தனது கடமையை நிறைவேற்றும் ஒரு காவல்காரர் குற்றம் செய்யும் நோக்கத்துடன் இயங்கும் ஒரு கும்பலின் தலைவனைக் கொன்றால், அதற்காக அவர் தண்டிக்கப்படுவதில்லை. ஒரு சிப்பாய் ஒரு எதிரி வீரரை போரில் கொன்றால், அதற்காக தண்டிக்கப்படுவதில்லை. உண்மையில், அவருக்கு துணிச்சலுக்கான தீரச் சான்றுரை அல்லது பதக்கம் கூட வழங்கப்படலாம். வெளிப்படையாகத் தண்டனை இல்லாமைக்குக் காரணம், இந்தச் செயல்கள் எந்தவொரு தவறான விருப்பத்தினாலோ அல்லது தனிப்பட்ட நோக்கத்தினாலோ தூண்டப்படவில்லை; அவை நாட்டுக்கான கடமையாகச் செய்யப்படுகின்றன. கடவுளின் சட்டக்கூறும் இதை ஒத்து இருக்கிறது. ஒருவன் எல்லா சுயநல நோக்கங்களையும் விட்டுவிட்டு, ஒப்புயர்வற்ற பகவானின் கடமைக்காக மட்டுமே செயல்பட்டால், அத்தகைய வேலை எந்த கர்ம வினைகளையும் உருவாக்காது.
எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் முடிவுகளில் இருந்து விலகி தனது கடமையை செய்வதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துகிறார். வெற்றி.--தோல்வி, இன்பம்-துன்பம் இரண்டையும் சமமாக எண்ணி, உள்ள சமநிலையுடன் போரிடும் போது, எதிரிகளைக் கொன்றாலும், அவனுக்குப் பாவம் ஏற்படாது. இந்த விஷயம் பகவத் கீதையில், 5.10 வது வசனத்தில் மீண்டும் கூறப்பட்டுள்ளது: ‘தாமரை இலை தண்ணீரால் தீண்டப்படாதது போல, எல்லா பற்றுதலையும் விட்டுவிட்டு, தங்கள் எல்லா செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள், பாவத்தால் தீண்டப்படாமல் இருக்கிறார்கள்.’
பற்றற்ற வேலையைப் பற்றிய ஒரு ஆழ்ந்த முடிவை அறிவித்த ஸ்ரீ கிருஷ்ணர், இப்போது தான் கூறியவற்றின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை வெளிப்படுத்த, செயல்முறையின் அறிவியலை விரிவாக விளக்குவதாகக் கூறுகிறார்.