Bhagavad Gita: Chapter 2, Verse 11

ஶ்ரீப43வானுவாச1 |
அஶோச்1யானன்வஶோச1ஸ்த்1வம் ப்1ரஞ்ஞாவாதா3ன்ஶ்ச1 பா4ஷஸே |

3தா1ஸூனக3தா1ஸூன்ஶ்ச1 நானுஶோச1ன்தி21ண்டி3தா1: ||11||

ஶ்ரீ-பகவானுவாச—--ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்;அஶோச்யான்--—துக்கப்படுவதற்கு தகுதியற்ற;  அன்வவஶோசஹ—--துயருற்று இருக்கிறாய்; த்வம்-—--நீ; ப்ரஞ்ஞாவாதான்—--விவேக வார்த்தைகளை; ச—--மற்றும்;பாஷஸே—--பேசுகிறாய்; கதாஸூன்—--இறந்தவர்களுக்காக;அகதாஸூன்—--உயிருள்ளவர்களுக்காக; ச—--அல்லது; ந--- இல்லை; அனுஶோசன்தி—---புலம்புவது; பண்டிதாஹா—---பண்டிதர்கள்

Translation

BG 2.11: ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்: நீ ஞான வார்த்தைகளைப் பேசும் பொழுது, ​​​​ துக்கப்படுவதற்கு தகுதியற்ற காரணங்களால் துயருற்று இருக்கிறாய். விவேகமுடையவர்கள் உயிருடன் இருப்பவர்களுக்காகவோ, இறந்தவர்களுக்காகவோ புலம்புவதில்லை.

Commentary

இந்த வசனத்தில் துவங்கி, ஸ்ரீ கிருஷ்ணர் தனது சொற்பொழிவுகளை ஒரு வியத்தகு தொடக்க அறிக்கையுடன் தொடங்குகிறார். மிகவும் நியாயமான காரணங்களுக்காக போராடுவதாக நினைக்கும் அர்ஜுனனுக்கு அனுதாபம் காட்டாமல், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் வாதங்களை பயனற்றதாக்குகிறார். அவர் கூறுகிறார், ‘அர்ஜுனா, நீ விவேகத்துடன் பேசுவதாக நினைத்தாலும் உண்மையில் நீ அறியாமையால் பேசுகிறாய் மற்றும் செயல்பபடுகிறாய். புலம்பலை நியாயப்படுத்த எந்த சாத்தியமான காரணமும் இல்லை. பண்டிதர்கள்-ஞானமுள்ளவர்கள்-உயிருள்ளவர்களுக்காகவோ அல்லது இறந்தவர்களுக்காகவோ புலம்புவதில்லை. எனவே, உன் உறவினர்களைக் கொல்வதில் நீ காணும் துக்கம் மாயையானது, நீ ஒரு பண்டிதர் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது.’

பகவத் கீதையின் தொடக்கத்திலேயே புலம்பலுக்கு மேலான ஒரு ஞானியை நாம் காணலாம். தலைசிறந்த பீஷ்மரே இதற்கு சரியான உதாரணம். வாழ்க்கை மற்றும் மரணத்தின் மர்மங்களை உணர்ந்து, சூழ்நிலைகளின் இருமைகளுக்கு மேலாக உயர்ந்த ஒரு முனிவர் அவர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதியான அவர், பகவானுக்கு சேவை செய்வதற்காக, துன்மார்க்கரின் பக்கத்தை எடுக்க ஒப்புக்கொண்டார். கடவுளிடம் சரணடைந்தவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தங்கள் கடமைகளை விளைவுகளால் பாதிக்கப்படாமல் எளிமையாகச் செய்கிறார்கள் என்பதை அவர் இவ்வாறு நிரூபித்தார். எல்லா சூழ்நிலைகளையும் கடவுளின் அருளாக ஏற்றுக்கொள்வதால் அப்படிப்பட்டவர்கள் புலம்புவதில்லை.

Watch Swamiji Explain This Verse