க்1லைப்3யம் மா ஸ்ம க3ம: பார்த2 நைத1த்1வய்யுப1ப1த்3யதே1 |
க்ஷுத்3ரம் ஹ்ருத3யதௌ3ர்ப3ல்யம் த்1யக்த்1வோத்1தி1ஷ்ட1 ப1ரந்த1ப1 ||3||
க்லைப்யம்---ஆண்மையின்மைக்கு; மா ஸ்ம---வேண்டாம்; கமஹ---அடிபணிய; பார்த----ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; ந---—இல்லை; ஏதத்--—இது; த்வயி—--நீ உனக்கு; உபபத்யதே--—தகுந்த; க்ஷுத்ரம்-—-அற்பத்தனமான; ஹ்ருதய--—இதயம்; தௌர்பல்யம்-—-மனத் தளர்ச்சியை; த்யக்த்வா-—-துறந்து; உத்திஷ்ட-—-எழுவாய்; பரந்தப-—-எதிரிகளை வென்று அடக்கியவனே; (ந உபபத்யதே----பொருந்தாது)
Translation
BG 2.3: ஓ பார்த்தா, இந்த ஆண்மையின்மைக்கு அடிபணிவது உனக்குப் பொருந்தாது. எதிரிகளை வென்று அடக்கியவனே இத்தகைய முக்கியமல்லாத வீண் பலவீனமான மனத் தளர்ச்சியை தவிர்த்துவிட்டு எழுந்திரு.
Commentary
அழிவின் பாதையில் வெற்றிகரமாக பயணிப்பதற்கு ஊக்க எழுச்சியும், உள ஆற்றலும் தேவை. சோம்பல், பழக்கவழக்கம், அறியாமை மற்றும் பற்றுதல் போன்ற பொருள் மனதின் எதிர்மறைகளை வெல்ல ஒருவர் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், ஆற்றல் மிக்கவராகவும் இருக்க வேண்டும். ஒரு திறமையான ஆசிரியரான ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை முதலில் கண்டித்துவிட்டு இப்பொழுது ஊக்குவிக்கிறார். இவ்வாறு அவரை ஊக்குவிப்பதன் மூலம் சூழ்நிலையை சமாளிக்க அர்ஜுனனின் உள் வலிமையை மேம்படுத்துகிறார்.
அர்ஜுனனை ப்ரிதாவின் மகன் (குந்தி தேவியின் மற்றொரு பெயர்) என்று அழைப்பதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் அவரை அவரது தாய் குந்தியை நினைவுகூற கூறுகிறார். குந்திதேவி தேவலோக தேவர்களின் அரசரான இந்திரனை வழிபட்டார். அவருடைய ஆசியுடன் அர்ஜுனன் பிறந்தார். எனவே, இந்திரனைப் போன்றே அசாதாரண வல்லமையும் வீரமும் கொண்டவராக இருந்தார். ஸ்ரீகிருஷ்ணர் இதை அவருக்கு நினைவூட்டி அவரது சிறப்புவாய்ந்த பெற்றோருக்கு பொருந்தாத இந்த இயலாமைக்கு அடிபணியாமல் இருக்க அர்ஜுனனை ஊக்குவிக்கிறார். மீண்டும் அவர் அர்ஜுனனை பரந்தபா, அல்லது எதிரிகளை வென்று அடக்கியவர் என்று அழைத்து அவருக்குள் எழும்பி இருக்கும் எதிரியை தோற்கடிக்க அறிவுறுத்துகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் தற்சமய உணர்வுகள் அவரது தார்மீக கடமையோ அல்லது உண்மையான இரக்கமோ அல்ல என்று கூறி அவை அவரின் புலம்பல் மற்றும் மாயையால் சூழ்ந்த மனதின் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்ட உணர்வுகள் என்று விளக்குகிறார். மேலும், அர்ஜுனனின் நடத்தை உண்மையிலேயே ஞானம் மற்றும் கருணையின் அடிப்படையில் அமைந்து இருந்தால்அவர் குழப்பத்தையோ வருத்தத்தையோ அனுபவிக்க மாட்டார் என்று கூறுகிறார்.