Bhagavad Gita: Chapter 2, Verse 31

ஸ்வத4ர்மமபி1 சா1வேக்ஷ்ய ந விக1ம்பி1து1மர்ஹஸி |

4ர்ம்யாத்3தி4 யுத்3தா4ச்1ச்2ரேயோ‌ன்யத்1க்ஷத்1ரியஸ்ய ந வித்3யதே1 ||31||

ஸ்வதர்மம்—--தர்மம்-வேதங்களின்படி ஒருவரின் கடமை; அபி ச—--அது மட்டுமின்றி; அவேக்ஷ்ய—--கருதி ந—இல்லை;  விகம்பிதும்----தடுமாறுவது; அர்ஹஸி---பொருந்தும் து; தர்ம்யாத்—-- நீதிக்காக;  ஹி—--உண்மையில்; யுத்தாத்—--போராடுவதை விட;  ஶ்ரேயஹ—--சிறந்தது; அன்யத்—--மற்றொரு;  க்ஷத்ரியஸ்ய—---ஒரு போர்வீரனுடைய; ந—இல்லை; வித்யதே—உள்ளது.; ( ந வித்யதே—---ஈடுபாடு இல்லை; (ந அர்ஹஸி—--உனக்கு பொருந்தாது)

Translation

BG 2.31: அதுமட்டுமின்றி, ஒரு போர்வீரனாக உனது கடமையைக் கருதி, நீ தளரக் கூடாது. உண்மையில், ஒரு போர்வீரனுக்கு, நீதியை நிலைநிறுத்துவதற்காக போராடுவதை விட சிறந்த ஈடுபாடு எதுவும் இல்லை.

Commentary

ஸ்வ-த4ர்மம் என்பது ஒரு தனிநபரின் வேதங்களின் படி அவரது கடமையாகும். தனிநபருக்கு இரண்டு வகையான ஸ்வ-த4ர்மங்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் உள்ளன-ப1ர த4ர்மம் அல்லது ஆன்மீக கடமைகள், மற்றும் அப1ர- தர்மம் அல்லது பொருள் கடமைகள். தன்னை ஆன்மாவாகக் கருதி, கடவுளை நேசிப்பதும் பக்தியுடன் சேவை செய்வதும் விதிக்கப்பட்ட கடமை; இது பர தர்மம் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், பெரும்பான்மையான மனிதர்ககளிடம் இந்த ஆன்மீக கண்ணோட்டம் இல்லை.

தன்னை உடலாகக் கருதுபவர்களுக்கான கடமைகளையும் வேதங்கள் கூறுகின்றன. இந்த கடமைகள் ஒருவரின் ஆசிரமம் (வாழ்க்கையில் நிலை) மற்றும் வர்ணம் (தொழில்) ஆகியவற்றின் படி வரையறுக்கப்படுகிறது. அவை அபர தர்மம் அல்லது இவ்வுலக கடமைகள் என்று அழைக்கப்படுகின்றன. பகவத் கீதை மற்றும் வேத தத்துவத்தை விஸ்தாரமாய்ப் புரிந்து கொள்ளும்போது ஆன்மீக கடமைகள் மற்றும் பொருள் கடமைகளுக்கு இடையே உள்ள இந்த வேறுபாட்டை மனதில் கொள்ள வேண்டும்.

போர் வீரனாக போர் புரியும் தொழிலை கொண்ட கடமை நீதியின் பாதுகாப்பிற்காக போராடுவதாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் இதை உடல் மட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட கடமை அல்லது ஸ்வ-தர்மம் என்று அழைக்கிறார்.

Watch Swamiji Explain This Verse